10 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த இசை ஜாம்பவான்கள்…

10 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த இசை ஜாம்பவான்கள்…

4/16/2019 12:44:41 PM

கே.ஜே.ஜேசுதாஸ் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் இளையராஜாவுக்காக விஜய் ஆண்டனி படத்தில் பாடியுள்ளார். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரித்து வரும் திரைப்படம் ‘தமிழரசன்’. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்து வருகிறார். மேலும் இதில் பூமிகா, சோனு சூட், யோகிபாபு, ரோபோ ஷங்கர், முனீஸ்காந்த், இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ், மலையாள நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, பழனிபாரதி மற்றும் ஜெய்ராம் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள புரட்சிகரமான பாடலை கே.ஜே. ஜேசுதாஸ் சென்னை வந்து பாடி கொடுத்துள்ளார். இந்நிலையில் 2009ம் ஆண்டு மம்முட்டி நடித்த பழசிராஜா என்ற மலையாள படத்தில் பாடிய ஜேசுதாஸ் அதற்கு பிறகு சினிமாவில் எந்த பாடலும் பாடாமல் இருந்து வந்தார். தற்போது இளையராஜாவுக்காக பாடியுள்ளது தமிழரசன் படத்திற்கு கிடைத்த மிக பெரிய பெருமை என்று பலரும் கூறிவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.