3 ஆண்டுகளை நிறைவு செய்த அட்லி-விஜய் கூட்டணியில் உருவான "தெறி"…#3YearsOfTheri

3 ஆண்டுகளை நிறைவு செய்த அட்லி-விஜய் கூட்டணியில் உருவான "தெறி"…#3YearsOfTheri

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ல் வெளியான படம் “தெறி”. இப்படத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா சரத்குமார், பிரபு இன்னும் பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மாபெறும் வெற்றி படமாக அமைந்தது. தற்போது இந்த படம் வெளியாக 3 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.
 

0pbnub48

 

ஒரு நேர்மையான காவல் துறை அதிகாரி, அவருடைய குடும்பத்தை எதிரிகள் சிதைத்து விடுகிறார்கள். தலைமறைவாக வாழும் அந்த அதிகாரி மீண்டும் எதிரிகளை எப்படி பழி வாங்குகிறார் என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.
 

fpaeufcg

 

3n7g3lgo

ஜி.வி.பிரகாஷ் இசையில் அனைத்து பாடல்களும் இந்த படத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
 

ar5r6uqg

சமந்தா இந்த படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியதோடு சொந்த குரலில் டப்பிங் செய்திருந்தார்.  
 

11g6fde8

குழந்தை நட்சத்திரமாக நடிகை மீனாவின் மகள் நைனிகா இந்த படத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
 
 

5gj3mtk

எமி ஜாக்சன் இரண்டாவது கதாநாயகியாக நடித்து படத்திற்கு வலு சேர்த்திருந்தார்.
 

lfel3po8

 
65 கோடியில் எடுக்கப்பட்ட இந்த படம் 158 கோடி வசூல் சாதனை படைத்தது.
 

dnl23pg

இந்த படத்தில் இடம் பெற்ற “ஜித்து ஜில்லாடி” என்ற பாடலை நீண்ட நாட்களுக்கு பிறகு தேனிசைத் தென்றல் தேவா பாடியிருந்தார்.
படம் வெளியாக 3 ஆண்டுகள் கடந்தும் இப்படத்தில் இடம் பெற்ற ‘உன்னாலே என்னாலும்’, ‘ஒன்னே ஒன்னு’ ஆகிய பாடல்கள் இன்னும் ரசிகர்களின் காதுகளில் ரீங்காரமாக ஒளித்துக்கொண்டிருக்கிறது.
 

2osqt7m

போக்கிரி படத்திற்கு பிறகு விஜய் காவல் துறை அதிகாரியாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் என்கிற பெருமையை இந்த படம் பெற்றது.
 

64lfe7v

காவல் துறை அதிகாரிகளை கௌரவிக்கும் விதமாக “ஜித்து ஜில்லாடடி” பாடல் இப்படத்தில் இடம் பெற்றது.
 

etpokld

இந்த படத்தின் இன்னொரு பலமாக இருந்தவர் மொட்டை ராஜேந்திரன். காவல் துறை அதிகாரியாக இருந்து எப்போதும் போல் தனது இயல்பான நகைச்சுவை உணர்வை இந்த படத்திலும் மிகை இல்லாமல் கொடுத்திருந்தார்.
 

36bbe0vo

தமிழ் சினிமாவின் மூத்த படைப்பாளி, எதார்த்த சினிமாவின் முன்னோடி என போற்றி புகழும் இயக்குநர் மகேந்திரன் முதல் முறையாக இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
 

1lik8va8

இப்படத்திற்கு ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் படம் ரசிகர்களை கதையோடு ஒன்றிபோகச் செய்திருந்தது.
 

p9ttc8u8

3ஆண்டுகள் கடந்தும் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்திருக்கும் ‘தெறி’ படக்குழுவினருக்கு வாழ்த்துகள்….
 

    Source link

    Leave a Comment

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.