"ஓட்டு உனது உரிமை" ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட மாஸ் வீடியோ

"ஓட்டு உனது உரிமை" ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட மாஸ் வீடியோ

அடுத்த ஐந்தாண்டு இந்திய தேசத்தின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் தேர்தலாக நாளை நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் இந்திய மக்களின் கைகளில் இருக்கிறது.
 
அரசியலமைப்புச்சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்றாலும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளுடன் கூடிய ஒரு சீர் கெட்டச் சமூகமாகமாகவே இன்னும் இருந்து வருகிறது இந்தியா.
 
சாதிய ஏற்றத்தாழ்வுகள், வர்க்கப்பிரச்னை, மதம், என ஏகப்பட்ட ஏற்றத்தாழ்வுகளால் நிறைந்திருக்கும் இந்த சமூகத்தில் ஏழை எளிய அடித்தட்டு மக்களுக்கும், உயர்சாதி, பொருதாராத்தில் வளர்ந்த சமூகத்தின்ருக்கும் ஒரே மாதிரியான உரிமையை இந்தியச் சூழலில் வழங்கப்படுகிறது என்றால் அது வாக்குரிமைதான்.
 
அரசியல் அமைப்புச்சட்டம்  மக்களுக்கு அளித்திருக்கும் ஒரே ஆயுதமும் இதுவே. வாக்களிப்பது என்பது அனைத்து குடிமகனும் செய்ய வேண்டிய கடமை என்பதை பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மாணிக்கும் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை பலரும் முன்வைத்து வருகின்றனர்.
 
தேர்தல் ஆணையம், அரசியல் கட்சி  தலைவர்கள், திரைப்பிரலங்கள் என அனைவரும் வாக்களிப்பது குறித்து பலரும் பேசி வருகிறார்கள்.
 
நாளை தேர்தல் நாள் என்பதால் ஒரு வாக்கு என்றுதானே அலச்சியமாக இருந்து விடாமல் அனைவரும் தங்களது ஓட்டை பதிவு செய்ய வேண்டும் என்கிற அடிப்படையில் திரைப்பட இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ தனது ட்விட்டர் பக்கத்தில், தான் இயக்கிய சர்கார் படத்தில் வரும் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.
 


அதில் விஜய் ஒரு வாக்கு என்று அலச்சியமாக இருக்காமல் கட்டாயம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கூறியிருப்பார். ஒரு வாக்கு வித்யாசத்தில் உலக நாடுகளில் நடந்த பல்வேறு மாற்றங்களை குறிப்பிட்டு பேசும் வசனம் இந்த படத்தில் இடம்பெறும். இதை பதிவிட்டு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று  கூறியிருக்கிறார் ஏ.ஆர். முருகதாஸ்.

    Source link

    Leave a Comment

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.