முதல் பொத்தானைத் தவிர வேறு எதை அழுத்தினாலும் கரண்ட் ஷாக் அடிக்கும்: சத்தீஸ்கர் அமைச்சரின் பிரசாரம்…

முதல் பொத்தானைத் தவிர வேறு எதை அழுத்தினாலும் கரண்ட் ஷாக் அடிக்கும்: சத்தீஸ்கர் அமைச்சரின் பிரசாரம்…

Korar, Chhattisgarh: 

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தேர்தல் வேட்பாளர் “முதல் பொத்தானைத்தான் அழுத்த வேண்டும். 2வது 3வது பொத்தானை அழுத்தினாலும் எலக்ட்ரிக் ஷாக் அடிக்கும்” என்று அமைச்சர் கவாசி லக்மா பேசியுள்ளார்.

நீங்கள் முதல் பொத்தானைத்தான் அழுத்த வேண்டும். மூன்றாவது பொத்தானை அழுத்தினால் ‘கரண்ட் ஷாக் அடிக்கும்’ என்று சத்திஸ்கர் மாநில கன்கர் மாவட்டத்தில்  தேர்தலுக்கான பொதுக் கூட்டத்தில் பேசியுள்ளார். அமைச்சர் கவாசி லக்மா சத்திஸ்கர் மாநிலத்தின் சுங்கவரி, வர்த்தக மற்றும் தொழிற்துறை மந்திரி ஆக 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறவர். 

சத்தீஸ்கரில் ஏப்ரல் 23 ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அரசியல்வாதிகள் மக்கள் தங்களுடைய கட்சிக்குத் வாக்களிக்க அழுத்தம் கொடுத்துவருகின்றனர். 

செவ்வாய் கிழமை பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் கடரா பிரதமர் நரேந்திர மோடி வாக்குசாவடிகளில் கேமரா வைத்துள்ளார். நீங்கள் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களித்தால் பார்த்துவிடுவார் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக பா.ஜ.க வேட்பாளர் மத்திய அமைச்சர் மேனகா காந்தி சுல்தான்பூர் தொகுதியில் முஸ்லீம்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். “நீங்கள் வாக்களிக்காவிட்டாலும் நான் வெற்றி பெற்றுவிடுவேன் அதன்பின் என் உதவியை எதிர்பார்க்கக் கூடாது” என்று எச்சரிகை விடுத்துள்ளார். தேர்தல் ஆணையம் 48 மணிநேரம் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என்று தடைவிதித்துள்ளது. 

சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.