அவ்ளோ சீன் இல்ல… பாஜகவுக்கும் கமலுக்கும் ரகசிய உடன்பாடா? தமிழிசை பளீச்

அவ்ளோ சீன் இல்ல… பாஜகவுக்கும் கமலுக்கும் ரகசிய உடன்பாடா? தமிழிசை பளீச்

பாஜகவும் கமலின் மக்கள் நீதி மய்யமும் ரகசிய உடன்பாடு வைத்துள்ளதா என்ற கேள்விக்கு தமிழிசை பதில் அளித்துள்ளார். 

 
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கமல் பிரச்சாரத்தின் போது பேசியது கடும் சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பி வருகிறது. 
 
நான் சரித்திர உண்மையை மட்டுமே பேசினேன் எனவும், நான் சொன்னதில் தவறு ஏதும் இல்லை என கூறும் கமலை, பாஜகவினரும், இந்து அமைப்பினரும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். 
 
இந்நிலையில், தமிழக தலைவர் தமிழிசை கமல் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, கமல்ஹாசன் தேவையில்லாத கருத்துக்களை கூறுகிறார். சினிமாவில் இப்படி பேசினாலே எதிர்ப்புகள் ஏற்படும். 

அரசியலில் கமலுக்கு இன்னும் பக்குவம் தேவை. கமல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட சலசலப்பை நாங்கள் வரவேற்கவில்லை. தேர்தல் பிரச்சாரத்தில் பல தரப்பட்ட மக்கள் கூடுவார்கள். இப்படி பேசினால் இந்துக்கள் மனம் புண்படும் என்று அவர் உணரவில்லை என பேசினார். 
 
அப்போது அவரிடம், மத உணர்வுகளை தூண்ட பாஜகவும் மக்கள் நீதி மய்யமும் ரகசிய உடன்பாடு வைத்துள்ளதா? என் கேட்கப்பட்டது, அதற்கு அவர் கமலிடம் எல்லாம் ரகசிய உடன்பாடு வைக்கும் அளவுக்கு எங்களுக்கு என்ன தேவை இருக்கிறது. நாங்கள் திமுக மாதிரி கிடையாது. திமுகவின் உறவுகள், சந்திப்புக்கள் ரகசியமானவை என்று தெரிவித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.