இந்த உலகம் எங்க போகுது…பப்ஜி நண்பருடன் வாழ கணவரிடம் விவகாரத்து கேட்கும் பெண்!

இந்த உலகம் எங்க போகுது…பப்ஜி நண்பருடன் வாழ கணவரிடம் விவகாரத்து கேட்கும் பெண்!

PUBG partner : பப்ஜி போதை தலைக்கு ஏறிய 19 வயது பெண் ஒருவர், பப்ஜி பார்டனருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறி கணவரிடம் விவகாரத்து கேட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பப்ஜி என அழைக்கப்படும் ஆன்லைன் கேம்மிற்கு இளைஞர்கள் பைத்தியமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பள்ளி சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள் படிப்பை கூட சரியாக தொடராமல் நாள் தோறும் மொபைல்களில் பப்ஜி கேம்மை விளையாடுவதை கண்டு பெற்றோர்கள் தினமும் வேதனையடைந்து வருகின்றனர்.

சமீபத்தில் பொதுத்தேர்வு எழுதிய மாணவன் ஒருவன், வினாத்தாளில் கேட்டப்பட்ட கேள்விக்கு பப்ஜி கேம் விளையாடு எப்படி என விடையளித்திருந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியது. அதுமட்டுமில்லை பல்வேறு நகரங்களில் பப்ஜி கேம்மிற்கு தடை விதிக்க நீதிமன்றத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பப்ஜி கேம்மிற்கு அடிமையாகி போன திருமணமான 19 வயது பெண் ஒருவர், பப்ஜி பார்டனருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறி கணவரிடம் விவகாரத்து கேட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு அவரின் 18 ஆவது வயதில் கட்டுமான தொழில் செய்து வரும் இளைஞருடன் திருமணம் நடைப்பெற்றது. இப்போது இந்த தம்பதியனருக்கு 1 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த பெண் கடந்த சில மாதங்களாக பப்ஜி கேம்மிற்கு அடிமையாகி வந்துள்ளார். நாள் தோறும் செல்போனில் பப்ஜி கேம்மை விளையாடி வந்துள்ளார்.

இந்நிலையில், அதே நகரில் வசித்து வரும் ஒரு ஆண் நண்பர் பப்ஜி விளையாட்டில் அந்த பெண்ணுக்கு அறிமுகமாகியுள்ளார்.இறுதியில் அந்த பெண்ணுக்கு அவர் மீது காதலும் ஏற்பட்டுள்ளது. இதன் அடுத்தப்படியாக அந்த பெண், குஜராத்தில் இருக்கும் அபயம் தொண்டு நிறுவனத்துக்கு போனில் தொடர்புக் கொண்டு தன்னுடன் பப்ஜி விளையாடும் ஆணுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், இதனால் தனது கணவரிடம் இருந்து தனக்கு விவகாரத்து வாங்கி தருமாறும் வேண்டியுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தொண்டு நிறுவனத்தின் பெண் நிர்வாகி உடனே அந்த பெண்ணை நேரில் அழைத்து பேசியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணை மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து சில பயிற்சிகளை மேற்கொள்ளச் சொல்லி அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். தவிர, கணவருடன் விவாகரத்து பெற்று குடும்பத்தாரை விட்டு பிரிவது தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்யவும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.