Tamilnadu political news live updates :  ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு சந்திப்பு!

Tamilnadu political news live updates : ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு சந்திப்பு!

Latest Tamil News: தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்துவிதமான முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இணைந்திருங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையத்துடன்.

அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை அன்று இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து பிரச்சார வேலையில் ஈடுபட்டு வருகின்றார்கள் அரசியல் கட்சித் தலைவர்கள். கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி பள்ளப்பட்டி தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

Tamilnadu political news live updates: பாஜக செய்தித் தொடர்பாளரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய், கமல் ஹாசனுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

தேர்தல் நலனுக்காக சிறுபான்மையினர் இருக்கும் பகுதியில் மத ரீதியாலான பிரச்சாரத்தை கமல் ஹாசன் மேற்கொண்டிருக்கிறார். எனவே 5 நாட்கள் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என்று கேட்டார்.

இணந்த வழக்கினை விசாரித்த எஸ்.சிஸ்தானி மற்றும் கோதி சிங் அடங்கிய அமர்வு புதன்கிழமையன்று (15/05/2019) விசாரணை செய்தது. அதில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் அவர் பேசியுள்ளார் எனவே தேர்தல் ஆணையத்திடமும், தமிழகத்திலும் தானே வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறி மனுவை விசாரிக்க இயலாது என்று மறுவித்துவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.