ஆக்ஷனில் இறங்கிய அமெரிக்க நிறுவனம்: தமிழ் ராக்கர்ஸை முடக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!-Samayam Tamil

ஆக்ஷனில் இறங்கிய அமெரிக்க நிறுவனம்: தமிழ் ராக்கர்ஸை முடக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!-Samayam Tamil

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஹாலிவுட் என்று எந்த மொழிப்படங்களுக்கு வில்லனாக இருப்பது என்னவோ தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மட்டுமே. எந்த மொழி படங்கள் வெளியானாலும், உடனடியாக அந்த படங்களை தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் லீக் செய்து வருகின்றன. இது போன்ற இணையதளங்களை முடக்குவதற்கு தமிழ் சினிமா என்னதான் போராடினாலும், முடியவில்லை. இதனால், மாஸ் நடிகர்கள், நடிகைகள் உள்பட சாதாரண நடிகர், நடிகைகள் படங்கள் வெளியாகி வருகின்றன.

அன்மையில், வெளியான தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தமிழ் ராக்கர்ஸ் 8ம் தேதி இரவு 8 மணிக்கே வெளியிட்டு படக்குழுவினருக்கு அதிர்ச்சியளித்தது. அதற்கு முன்னதாக தான், சென்னை உயர்நீதிமன்றத்தில் படத்தை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளங்களை முடக்க வேண்டும் என்று நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், படம் லீக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:
Sarileru Neekevvaru: 13 வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் படத்தில் விஜயசாந்தி!

தமிழ் ராக்கர்ஸ் உள்பட படங்களை வெளியிடும் இணையதளங்களால், எந்த படமாக இருந்தாலும் சரி அதன் வசூல் பாதிக்கப்படுவதோடு, அதனால், தயாரிப்பாளர்கள் தான் நஷ்டம் அடைகின்றனர். இதன் காரணமாக தயாரிப்பாளர்கள் என்னதான் முயற்சி மேற்கொண்டாலும், அதற்கு எந்த பலனும் இல்லை. இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த வார்னர் பிராஸ் (Warner Bros) என்ற தயாரிப்பு நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

Also Read:
ஃபாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தில் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை!

அந்நிறுவனம் தொடர்ந்த வழக்கில் கூறியிருப்பதாவது: திரைப்படங்களை, தொலைக்காட்சி தொடர்களை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதால், தங்களது தயாரிப்பு நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதன் விளைவாக தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களை உடனடியாக முடக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எப்போதெல்லாம் புதிய படங்கள் வெளியாகிறதோ, அப்போது படங்களை திருட்டுத்தனமாக இணையதளங்களில் பதிவிடும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் பெயர்களில் செயல்பட்டு வரும் டொமைன்களை உடனடியாக முடக்க வேண்டும் என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

Also Read:
Sai Pallavi: இந்திய சினிமா வரலாற்றில் தனுஷ் – சாய் பல்லவி கூட்டணியில் சாதனை படைத்த ரௌடி பேபி!

அதோடு, இது போன்ற சட்டவிரோதமாக படங்களை இணையதளங்களில் பதிவேற்றி வரும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களை முடக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி இணைய சேவை நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் (சமயம்) திருட்டுதனமாக திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் இணையதளங்களை என்றுமே ஆதரிக்காது. இது செய்திக்காக மட்டுமே விளம்பரத்திற்கு அல்ல.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.