பதில் அளிக்க முடியாமல் திணறல்.! முதல்வருக்கே மெமோ கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்.! 

பதில் அளிக்க முடியாமல் திணறல்.! முதல்வருக்கே மெமோ கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்.! 

இன்று காலை நீமோகாக்கல் தடுப்பூசி மற்றும் ரத்த நாள அறுவை சிகிச்சை பிரிவு தொடக்க விழாவும், இருதய துறையில் குறுகிய காலத்தில் 2750 நபர்களுக்கு ஏஞ்சியோ சிகிச்சை செய்ததற்கு கவுரவித்தல் நிகழ்ச்சியும் கோயம்புத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.

இதில் தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் பங்கு பெற்றனர். அப்பொழுது அரசு மருத்துவ கல்லூரி நர்சிங் மாணவிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துரையாடல் நடத்தினார்.

vijayabasker, seithipunal
 
அங்கிருந்த நர்சிங் மாணவிகளிடம் அரசு மருத்துவமனையில் அரசின் சுகாதாரத்துறை மூலம் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் அம்மா பரிசு நல பெட்டகம் உள்ளிட்டவை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அந்த மாணவிகளால் அதற்கு சரிவர பதில் அளிக்க முடியவில்லை. 

அதன் பின்னர் இந்த திட்டங்கள் குறித்து அரசு நர்சிங் பள்ளி முதல்வர் (பொறுப்பு) தனலட்சுமியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் அவராலும் இதற்கு பதில் கூற முடியவில்லை. இதனால் பள்ளி பொறுப்பு முதல்வருக்கு 17ஏ (மெமோ) அளிக்க அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.