அம்பானியின் First-Day-First-Show திட்டம்; புலம்பி தள்ளும் PVR மற்றும் INOX! பின்னணி என்ன?-Samayam Tamil

அம்பானியின் First-Day-First-Show திட்டம்; புலம்பி தள்ளும் PVR மற்றும் INOX! பின்னணி என்ன?-Samayam Tamil

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ்
ஜியோ
நிறுவனத்தின்

ஜியோஃபைபர் சேவை
யானது அந்நிறுவனத்தின் 42 வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அந்நாளில் திரையரங்க உரிமையாளர்களின் வயிற்றில் புளியை கரைக்கும் ஒரு அறிவிப்பையும் அம்பானி நிகழ்த்தினார்.

ஜியோஃபைபர் சேவையின் ஒரு பகுதியாக அம்பானி தனது புதிய ‘முதல் நாள் முதல் காட்சி’ திட்டத்தையும் அறிவித்தார். அதாவது First-Day-First-Show திட்டம்!

வீட்டில் இருந்தபடியே!

இந்த திட்டத்தின் மூலம் இந்தியர்கள், குறிப்பிட்ட நாளில் திரையரங்குகளுக்கு வரும் புதிய திரைப்படங்களை தங்கள் வீட்டில் இருந்தபடியே கண்டுகளிக்கலாம். ஜியோவின் இந்த First-Day-First-Show திட்டமானது வருகிற 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஜியோஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமாக கிடைக்கும் என்று அம்பானி கூறி முடிக்கவும், பொதுக்கூட்ட அரங்கமே ஆர்ப்பரித்தது. அதன் பிறகு கிளம்பியதெல்லாம் வெறும் எதிர்ப்புகள் தான்!

எங்கும் எதிர்ப்புகள்!

‘முதல் நாள் முதல் காட்சி’ திட்டத்தின் வழியாக, இந்தியர்கள் பொழுதுபோக்குகளை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை ரிலையன்ஸ் ஜியோ மறுவடிவமைக்க முயல்கிறது என்றும், முகேஷ் அம்பானியின் இந்த அறிவிப்பு, சமீபத்திய திரைப்படங்களைப் பார்க்கும் கருத்தை ஒட்டுமொத்தமாக சீர்குலைக்கும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பின.

BSNL Combo Plan: இந்த BSNL திட்டத்தை பற்றி கேட்டால் அம்பானியே ஆடிப்போய் விடுவார்!

எதிர்ப்பது யாரோ?

இந்த எதிர்ப்புகள் அனைத்தும் மக்களிடம் இருந்து வரவில்லை,
PVR
சினிமாஸ் மற்றும்
INOX
போன்ற பெருநிறுவனங்களிடம் இருந்து வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் பாதிக்கப்படப்போவது அவர்கள் தானே!

வேறுபட்ட இருவேறு அனுபவங்கள்!

ஜியோவின் First-Day-First-Show திட்டத்தை பற்றி கருத்துக்களை பகிர்ந்துள்ள பி.வி.ஆர் சினிமாஸ் மற்றும் ஐனாக்ஸ், தியேட்டர்களில் படம் பார்ப்பதும், தியேட்டர்களை தவிர மற்ற தளங்களின் வழியாக திரைப்படங்களை பார்ப்பதும், முற்றிலும் வேறுபட்ட இருவேறு அனுபவங்கள் ஆகும் என்று கூறியுள்ளன.

வெறும் ரூ.17,990/-க்கு சாம்சங் 32-inch 7-in-1 ஸ்மார்ட் டிவி அறிமுகம்! அதென்ன 7-இன்-1?

தியேட்டரிக்கல் விண்டோ!

மேலும், இந்தியாவில் மல்டிபிளக்ஸ் மற்றும் ஒற்றை-திரை நிறுவனங்கள் இரண்டுமே, ஒரு திரைப்படத்தின் விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் பிரத்யேக ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றன. அந்த ஒப்பந்தங்கள் ஆனது குறிப்பிட்ட படத்திற்கான “தியேட்டரிக்கல் விண்டோ” முடிவடையும் வரையிலாக, அந்த திரைப்படம் OTT, DVD மற்றும் DTH போன்ற தளங்களை அடையாது என்பதை உறுதி செய்கிறது.

வருந்தும் பிவிஆர் மற்றும் ஐனாக்ஸ்!

இம்மாதிரியான நிலைப்பாட்டில், ஒரே நேரத்தில் தியேட்டர்கள் மற்றும் ஜியோவின் வரவிருக்கும் சேவை என்கிற இருவேறு தளங்களில் ஒரு திரைப்படம் வெளியாகும் பட்சத்தில், ஒப்புக்கொள்ளப்பட்ட பிரத்தியேக தியேட்டரிக்கல் விண்டோ பரஸ்பரமானது உடைந்து போகும் வாய்ப்புள்ளது என்று கூறி பிவிஆர் மற்றும் ஐனாக்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.