அரசாங்கம் மக்களை டேட்டாவா பாக்குது, அரசியல்வாதி ஓட்டா பாக்குறான்-ஜி.வி.பிரகாஷ்

அரசாங்கம் மக்களை டேட்டாவா பாக்குது, அரசியல்வாதி ஓட்டா பாக்குறான்-ஜி.வி.பிரகாஷ்


|

சென்னை: அரசாங்கம் மக்களை டேட்டாவா தான் பாக்குது, அரசியல்வாதிங்க ஓட்டா பாக்குறாங்கன்னு ஐங்கரன் படத்தில் பஞ்ச் வசனம் பேசியுள்ளார் நடிகர் ஜி.வி. பிரகாஷ். ஐங்கரன் பட ரிலீஸ் தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ஜி.வி.பிரகாஷ், இந்தப் படத்தில் பேடன்ட் உரிமைக்காக போராடும் இளம் விஞ்ஞானியாக நடித்திருப்பதாக கூறினார்.

வெற்றியோ தோல்வியோ அடுத்தடுத்து படங்களை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மக்களின் மனதில் தொடர்ந்து நிலைத்து நிற்க முடியும் என்று புரிந்துகொண்டு அதற்கேற்ப காய் நகர்த்தி வருகிறார் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்.

ஐங்கரன் படத்தில் ஜி..வி.பிரகாஷ் வழக்கத்துக்கு மாறாக பஞ்ச் வசனங்கள் பேசி தெறிக்கவிடுகிறார். குறிப்பாக, இங்க ஆகாயத்துக்கு ராக்கெட் விட்றதுக்கும் விஞ்ஞானி இருக்கான், ஆழ்கடல்ல எறங்கி ஆராய்ச்சி பண்றதுக்கும் விஞ்ஞானி இருக்கான், ஆனா அத அங்கீகரிக்கிறதுக்கு தான் ஆள் கிடையாதுன்னு பஞ்ச் டயலாக் பேசுகிறார்.

காதலும் கலாட்டாவும்

ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் நடித்து வெளிவர இருக்கும் படங்கள் 5க்கும் மேல் கைவசம் உள்ளன. இதில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதியன்று, 100 சதவிகிதம் காதல் படமும், ஐங்கரன் படமும் வெளியாகவிருக்கிறது. இதில் 100 சதவிகிதம் காதல் முழுக்க முழுக்க காதலும் கலாட்டாவுமாக நடக்கும் கதை.

இளம் விஞ்ஞானி ஜி.வி.பிரகாஷ்

இளம் விஞ்ஞானி ஜி.வி.பிரகாஷ்

ஐங்கரன் படம், அதற்கு மாறாக முழுக்கு முழுக்க ஒரு இளைஞன், இளம் விஞ்ஞானி தன்னுடைய கண்டுபிடிப்புக்காக போராடும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்கிய ரவி அரசு, இதற்கு முன்பு ஈட்டி படத்தை இயக்கியுள்ளார். ஐங்கரன் படக்கதையை இதற்கு முன்பு பல நடிகர்களிடமும் சொல்லி நடிக்க கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அனைவருக்கும் அதற்கான நேரம் இல்லாததால், இறுதியாக ஜி.வி.பிரகாஷ் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

லிப்ரா வெளியீடு

லிப்ரா வெளியீடு

இந்தப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக சாட்டை பட நாயகி மகிமா நம்பியார் நடித்துள்ளார். காளி வெங்கட், சித்தார்த்தா சங்கர், வி வெங்கட்ராமன், ஹரீஷ் பேரடி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படத்தை காமன் மேன் கணேஷ் தயாரித்துள்ளார். லிப்ரா புரொடக்சன்ஸ் இப்படத்தை வெளியிடுகிறது.

ஜெயித்தாரா இல்லையா

ஜெயித்தாரா இல்லையா

ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்தில் இளம் விஞ்ஞானியாக நடித்துள்ளார். தன்னுடைய கண்டுபிடிப்புக்கான உரிமைக்காக போராடி ஜெயித்தாரா இல்லையா, அவருடைய கண்டுபிடிப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

பஞ்ச் வசனங்கள் நிறைய இருக்கு

பஞ்ச் வசனங்கள் நிறைய இருக்கு

இந்தப் படத்தில் ஜி..வி.பிரகாஷ் வழக்கத்துக்கு மாறாக பஞ்ச் வசனங்கள் பேசி தெறிக்க விடுகிறார். குறிப்பாக, இங்க ஆகாயத்துக்கு ராக்கெட் விட்றதுக்கும் விஞ்ஞானி இருக்கான், ஆழ்கடல் எறங்கி ஆராய்ச்சி பண்றதுக்கும் விஞ்ஞானி இருக்கான், ஆனா அத அங்கீகரிக்கிறதுக்கு தான் ஆள் கிடையாதுன்னு பஞ்ச் டயலாக் பேசுகிறார்.

அரசியல்வாதி ஓட்டாதான் பாக்குறான்

அரசியல்வாதி ஓட்டாதான் பாக்குறான்

மற்றொரு இடத்தில் அரசாங்கம் மக்களை டேட்டாவா தான் பாக்குது, அரசியல்வாதிங்க ஓட்டா பாக்குறாங்கன்னு அரசியல் பஞ்சும் பேசுகிறார். அநேகமாக இந்த வசனங்கள் சென்சாரின் கத்திரியில் இருந்து தப்பினால் ஆச்சரியம் தான்.

ட்ரெய்லர் வெளியீடு

ட்ரெய்லர் வெளியீடு

இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் இந்தப் படத்தின் இயக்குநர் ரவி அரசு, இயக்குர் பாராதிராஜா, இயக்குநர் வசந்த பாலன், இயக்குநர் சமுத்திரக்கனி, இயக்குநர் ரத்தின சிவா, ஜே,எஸ்,கே, அம்மன் கிரியேஷன்ஸ் சிவா, தம்பி ராமையா, ஆடுகளம் நரேன் ஆகியோர் பங்கேற்றனர்.

நிச்சயம் வெற்றி பெறும்

நிச்சயம் வெற்றி பெறும்

நடிகர் தம்பி ராமையா பேசும்போது, சில இயக்குநர்கள் முதல் படத்தை முடித்துவிட்டு அந்த இடத்தை தக்கவைக்க அவசரம் அவசரமாக அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் வாங்கி அடுத்த ஆறு மாதத்திலேயே படத்தை முடித்து வெளியிடுகின்றனர். இதனால் அந்தப் படம் தோல்வியடைகிறது. ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர் ஈட்டி படத்திற்கு பின் நிதானமாக யோசித்து இந்தப் படத்தை எடுத்துள்ளார். எனவே இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

போராட வேண்டியிருக்கு

போராட வேண்டியிருக்கு

இயக்குநர் வசந்தபாலன் பேசும்போது, தமிழ் படங்களுக்கும் இயக்குநர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைப்பதற்காக போராட வேண்டியுள்ளது என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

பாரதிராஜா மனவேதனை

பாரதிராஜா மனவேதனை

இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, வசந்தபாலன் சொல்வதுபோல், நல்ல தரமான தமிழ் படங்களுக்கு தேசிய விருதுபோல் உரிய அங்கீகாரம் கிடைக்காதது வருத்தமளிக்கிறது. குறிப்பாக கிராமத்து வாழ்வியலை சொன்ன மேற்கு தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள் போன்ற நல்ல படைப்புகளுக்கு தேசிய விருது கிடைக்காமல் போனது மனவேதனை அளிக்கிறது என்றார்.

அழகான தமிழில் அசத்திய மகிமா

அழகான தமிழில் அசத்திய மகிமா

ஐங்கரன் படத்தின் கதாநாயகி மேடையில் பேசம்போது, மற்ற நடிகைகளைப் போல் தமிழை கொன்று கூறுபோடாமல் அழகான சுத்த தமிழிலேயே பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இதைப்பற்றி பாரதிராஜாவே குறிப்பிட்டு சந்தோசப்பட்டார்.

ஒரே நாள் ரெண்டு படம் ரிலீஸ்

ஒரே நாள் ரெண்டு படம் ரிலீஸ்

ஐங்கரன் படமும், அடுத்த சாட்டை படமும் வரும் செப்டம்பர் 5ஆம் தேதியன்று ஒரே நாளில் வெளியாகிறது. இந்த இரண்டு படங்களையும் லிப்ரா புரொடக்சன் நிறுவனமே வெளியிடுகிறது. இதுபற்றி குறிப்பிட்ட இந்நிறுவனம் மற்ற நிறுவன படங்களுடன் போட்டி போடுவதை விட நம்முடைய நிறுவனத்தின் இரண்டு படங்களும் போட்டி போடட்டுமே, அதுவும் நல்லது தான் என்று குறிப்பிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.