இன்று 3-ஆவது ஒருநாள்: ஷிகர் தவன் ஆட்டத்தால் அணி நிர்வாகம் கவலை

இன்று 3-ஆவது ஒருநாள்: ஷிகர் தவன் ஆட்டத்தால் அணி நிர்வாகம் கவலை

மே.இ.தீவுகள் அணியுடன் 3-ஆவது ஒருநாள் ஆட்டம் புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தொடக்க வீரர் ஷிகர் தவனின் மோசமான ஆட்டம் அணி நிர்வாகத்துக்கு கவலையை úற்படுத்தியுள்ளது.
டி20 தொடரை 3-0 என இந்திய அணி ஒயிட்வாஷ் செய்த நிலையில், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டபோதும், டிஎல்எஸ் முறையில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.
ஷிகர் தவன் சொதப்பல்: 3 டி20, ஒருநாள் ஆட்டம் என 4 தொடர்ச்சியான ஆட்டங்களில் ஷிகர் தவன் 1, 23, 3, 2 என சொற்ப ரன்களுடன் வெளியேறினார். ரோஹித் சர்மா மட்டுமே ஒரளவு ரன்களை குவித்தார். பெரிய ஸ்கோர் எதையும் தவன் விளாசதது, அணி நிர்வாகத்துக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
3-ஆவது ஆட்டத்தில் தவன் சிறப்பாக ஆடுவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நான்காம் நிலை பேட்ஸ்மேன்: அதே நேரத்தில் நான்காம் நிலை பேட்ஸ்மேன் இடத்துக்கு இளம் வீரர்கள் ரிஷப் பந்த், ஷிரேயஸ் ஐயர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. விக்கெட் கீப்பரான பந்த்துக்கு அணி நிர்வாகம் ஆதரவு தந்தாலும், ஷிரேயஸ் ஐயர் 2-ஆவது ஆட்டத்தில் 71 ரன்களை விளாசியது, நிலைமையை மாற்றியுள்ளது. வழக்கம் போல் பேட்டிங்கில் அணியை மீட்கும் வேலையை விராட் கோலி செய்வார் எனத் தெரிகிறது. பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் அபார பார்மில் உள்ளார். அவருக்கு துணையாக முகமது ஷமி, குல்தீப் யாதவும் சிறப்பாக வீசுகின்றனர்.
வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிலையில் மே.இ.தீவுகள்: கடைசி ஒருநாள் ஆட்டத்தில் வென்றே தீர வேண்டிய நிலையில் உள்ள மே.இ.தீவுகள். சிறந்த பேட்ஸ்மேன்களான ஷிம்ரன் ஹெட்மயர், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரண் ஆகியோர் தங்கள் ஆட்டத்திறனை வெளிப்படுத்தவில்லை. கிறிஸ் கெயிலும் மந்தமாக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் மே.இ.தீவுகள் பந்துவீச்சு கட்டுக்கோப்பாக உள்ளது என்றாலும் ரன்களை வாரி வழங்குவது பாதகமாக உள்ளது.
கடைசி ஆட்டத்தில் வென்று தொடரை கைப்பற்றுமா இந்தியா அல்லது, சமன் செய்யுமா மே.இ.தீவுகள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டெஸ்ட் தொடர்: ஒருநாள் தொடர் முடிந்தபின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஒரு பகுதியாக 2 ஆட்டங்கள் கொண்ட தொடர் ஆண்டிகுவாவில் 22-ஆம் தேதி தொடங்கும்.

இன்றைய ஆட்டம்
மே.இ.தீவுகள்-இந்தியா,
இடம்: போர்ட் ஆஃப் ஸ்பெயின், 
நேரம்: இரவு 7.00.
 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.