கவுரவிக்கப்படும் தமிழக காவலர்கள்; 23 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பு!-Samayam Tamil

கவுரவிக்கப்படும் தமிழக காவலர்கள்; 23 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பு!-Samayam Tamil

நாடு முழுவதும் சிறப்பாக செயல்படும் காவல்துறையினருக்கு ஆண்டுதோறும் குடியரசுத் தலைவர் விருது வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில் தமிழகக் காவல்துறையைச் சேர்ந்த 23 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில், சிவகங்கை எஸ்.பி ஜெயச்சந்திரன், கியூ பிரிவு டிஎஸ்பி யாகோப், கோவை காவலர் பயிற்சி பள்ளி சப்-இன்ஸ்பெக்டர் சபரிநாதன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

Also Read:
நீங்களா, நானா? யாரு ’சீன்’ போடுறது? முட்டி மோதிக் கொள்ளும் முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின்!

மேலும் ஏடிஜிபி சங்கர் ஜிவால், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி உன்னிகிருஷ்ணன், விழுப்புரம் டிஎஸ்பி திருமால், டிஎஸ்பிக்கள் கிருஷ்ணராஜன், லவக்குமார், தட்சிணாமூர்த்தி, ஆவடி உதவி கமாண்டன்ட் கோவிந்தராஜூலு ஆகியோரும் தேர்வாகி உள்ளனர்.

Also Read:
கொள்ளையர்களுடன் சண்டையிட்ட நெல்லை முதிய தம்பதிக்கு வீரதீர விருது- ஆட்சியர் பரிந்துரை!

இதேபோல் காவல் ஆய்வாளர் பாரா வாசுதேவன், காவல் ஆய்வாளர் சவுந்தரராஜன், உதவி ஆய்வாளர் பாலச்சந்தர், மல்லிகா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், ஜக்கரியா, சாகுல் ஹமீது, குமரவேல், ராஜா, சோனை ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Also Read:
இத்தனை சிறப்பு வசதிகளா? புதிதாக களமிறங்கிய 500 பேருந்துகள்- தொடங்கி வைத்த தமிழக முதல்வர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.