பீஜிங் : சீனாவை புரட்டிப் போட்ட, ‘லெக்கிமா’ சூறாவளி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவால், பலியானோர் எண்ணிக்கை, 49 ஆக அதிகரித்துள்ளது;

21 பேரை காணவில்லை.அண்டை நாடான, சீனாவின், ஜெஜியாங் மாகாணத்தை, கடந்த வாரம், கடும் சூறாவளி தாக்கியது. லெக்கிமா என பெயரிடப்பட்ட இந்த சூறாவளியால், பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டன. ஜெஜியாங் மாகாணத்தை அடியோடு புரட்டிப் போட்ட இந்த சூறாவளி, சாண்டோங், அன்ஹுலி ஆகிய மாகாணங்களையும் அடுத்தடுத்து தாக்கியது.ஜெஜியாங் மாகாணத்தில் மட்டும், நேற்று மாலை வரை, 39 பேர் பலியாகி உள்ளனர். மற்ற மாகாணங்களில், 10 பேர் பலியாகினர்.

இந்த சூறாவளி மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, 21 பேரை காணவில்லை.பலத்த மழையை தொடர்ந்து, பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. பல லட்சம் பேர், பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்; 2.34 லட்சம் ஹெக்டார் மதிப்பிலான விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.இந்த மூன்று மாகாணங்களிலும் வரலாறு காணாத மழை பெய்துள்ளதால், பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.