ட்விட்டரில் ஏற்பட்ட குழப்பம்… விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்ட ஸ்டெயின்!

ட்விட்டரில் ஏற்பட்ட குழப்பம்… விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்ட ஸ்டெயின்!

Dale Steyn "Apologises" To Virat Kohli, Takes A Dig At Selectors After T20I Snub

டேல் ஸ்டெயின் இந்தியா சுற்றுப்பயணத்துக்கு செல்லும் தென்னாப்பிரிக்க டி20 அணியில் இடம்பெறவில்லை. © AFP

டேல் ஸ்டெயினின் சர்வதேச போட்டிகள் காயம் காரணமாக தடைப்பட்டது. முழுமையாக குணமடைந்த ஸ்டெயின், தன்னை தயார் நிலையில் வைத்திருந்தும், இந்தியா சுற்றுப்பயணத்துக்கு செல்லும் தென்னாப்பிரிக்க டி20 அணியில் இடம்பெறவில்லை. அணியை அறிவித்த தேர்வுக்குழுவினரும் ஸ்டெயின் தேர்வு செய்யப்படாததற்கு காரணம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஒரு ட்விட்டுக்கு பதிலளித்த ஸ்டெயின் தான் அணி தேர்வின் போது தயார் நிலையில் இருந்ததாக தெரிவித்தார். “நான் தயாராக இருந்தேன்… தேர்வு செய்யும் போது பயிற்சி ஊழியர்கள் என்னுடைய பெயரை தொலைத்து விட்டிருப்பார்கள்.” என்று ஸ்டெயின் ட்விட் செய்தார்.

நெயில் மன்த்ரோப் என்பவர் ட்விட்டரில், “புது தேர்வாளர்கள் உங்களை “பெரிய” போட்டிகளுக்காக காக்க வைத்திருக்கிறார்கள்” என்று ட்விட் செய்தார்.

அதிலிருக்கும் உள்ளர்த்தம் புரியாத ஸ்டெயின், “நான் தயாராக இருந்தேன்… தேர்வு செய்யும் போது பயிற்சி ஊழியர்கள் என்னுடைய பெயரை தொலைத்து விட்டிருப்பார்கள்.” என்று பதிலளித்தார்.

நெயில் மன்த்ரோப், ‘பெரிய’ போட்டிகள் என்று கூறியது, இந்திய அணியை அந்த பட்டியலில் சேர்க்கவில்லை என்பது போல் பதிவானது. அதனால், ஸ்டெயின் விராட் கோலியிடமும், ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டார்.

விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்டு ஸ்டெயின் ட்விட்டரில், “அவர்கள் இல்லை என்று நினைக்கும் விராட் கோலி மற்றும் பில்லியன் மக்களிடம் என்னுடைய மன்னிப்பை கேட்டுகொள்கிறேன்” என்றார்.

காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேறிய ஸ்டெயின், யூரோ டி20 ஸ்லாம் போட்டியில் இணைந்தார். காயத்தால் உலகக் கோப்பையிலும் அவர் இடம்பெறவில்லை.

36 வயதான இவர், தென்னாப்பிரிக்காவுக்காக 44 டி20 போட்டிகள் ஆடியுள்ளார். 17.50 சராசரியுடன் 61 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். குறைந்த ஓவர் போட்டியில், 6.79 எக்கானமியுடன் உள்ளார் ஸ்டெயின்.

ஸ்டெயின் இதுவரை 201 டி20 போட்டிகளில் ஆடி 231 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 4/9 என்று விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

ஸ்டெயின் சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். குறைந்த ஓவர்கள் போட்டியில் அவர் தொடரவுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.