தடையால் ஒன்னும் பண்ண முடியாது-ஹெச்.ராஜாபாணி தமிழ்ராக்கர்ஸ் பதில்?

தடையால் ஒன்னும் பண்ண முடியாது-ஹெச்.ராஜாபாணி தமிழ்ராக்கர்ஸ் பதில்?

தமிழ், தெலுங்கு, கன்னடம் , ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு வெளியாகும் படங்களை அன்றே தனது இணையளத்தில் வெளியிட்டு அனைத்து திரையுலகினர்க்கும், பட தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்த வருகின்றது தமிழ் ராக்கர்ஸ்.

தமிழ் திரையுலகினர் கடுமையாக எதிர்த்த போதிலும் எந்த ஹீரோ தமிழர்ராக்கர்ஸை சாடினாரோ அன்றே தனது இணையதளத்தில் படத்தை வெளியிட்டு பதில் அடி கொடுத்து வருகின்றது.

தடையால் ஒன்னும் பண்ண முடியாது-ஹெச்.ராஜாபாணி தமிழ்ராக்கர்ஸ் பதில்?

ஒரு புறம் எதிர்ப்பு இருந்தாலும் மற்றொரு புறம் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காட்டில் திரையரங்கு செல்லாமல் தமிழ்ராக்கர்ஸ் உதவியோடு இலவசமாக படம் பார்க்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கின்றது.

இந்நிலையில் டெல்லி உயர்நீதி மன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கை தொடர்ந்த வார்னஸ் பிரதர்ஸ் நிறுவனத்துக்கும் தமிழ்ராக்கர்ஸ் ஹெச் ராஜா பாணியில் பதிலை சொல்லிவிட்டு புதிய டொமைனில் , வெளியாகும் என்பதில் சந்தேமில்லை.

 கடுமையாக எதிர்த்த விஷால்:

கடுமையாக எதிர்த்த விஷால்:

நடிகர் சங்க தலைவராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்த நடிகர் விஷால் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தை கடுமையாக எதிர்த்தார். தமிழர் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.

ஆனால், கடைசியில் அது ஆபாச வலைதளத்தை நடத்துவோர்களைத்தான் பிடிக்க முடிந்தது. கோர்ட் மற்றும் அரசும் நடவடிக்கை எடுத்தாலும் சட்ட நுணுக்கத்தின் உதவியோடு தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் பல்வேறு டொமைன்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்திய படங்களுக்கு கிர்:

இந்திய படங்களுக்கு கிர்:

இந்நிலையில், இந்தியாவில் தயாரகும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிபடங்களையும் விட்டு வைக்காமல் தனது சாவால் விட்டு தனது டுவிட்டர் மற்றும் இணையதளத்திலும், வெளியிட்டு வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியது.

மேலும், படம் வெளியான முதல் நாளே தனது திரைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தியேட்டர் உரிமையாளர்களும் குற்றச்சாட்டு :

தியேட்டர் உரிமையாளர்களும் குற்றச்சாட்டு :

வெளியே வரும் புதிய திரைப்படங்களும், ஹீரோ ஹீரோயின் ரேட்டிங்களும் இருப்பதாலும் அதற்கு எங்களிடம் அதிகமாக பணம் பெறப்படுகின்றது. ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க வேண்டியே அதிக கட்டணம் வாங்குவதாகவும் திரையரங்கு உரிமையாளர்களும் தங்களின் மனக்குமுறல்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் என்னவோ ஒருசில திரையரங்கு உரிமையாளர்களும் தமிழ் ராக்கர்ஸ் போன்று வலைதள உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டும், அல்லது தயாரிப்பாளர்களுக்கு போட்டியாக உள்ள மற்றவர்களும் தயாரிப்பாளர்களும் செலவு செய்து தமிழ்ராக்கர்ஸ் போன்ற வலைதளங்களுக்கு வெளியே வரும் படத்தை கொடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றது.

ஹெச்டியில் திரைப்படம்:

ஹெச்டியில் திரைப்படம்:

இதில் வெளியே வரும் புதிய தமிழ் திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கில திரைப்படங்களும் வெளியாகின்றன. திரையங்களில் வெளியாகும் நாட்களிலோ அல்லது அதற்கு முன்போ ஹெச்டி தரத்திலும் வெளியாகி திரைப்பட தயாரிப்பாளர்களையும் நடிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகின்றன. இதனால் இந்த படங்கள் போதிய நாட்கள் கூட ஓடாமல் நஷ்டத்தில் போய் முடிந்து விடுவதும் உண்டு. இதனால் ஒரு சில திரையரங்கு உரிமையாளர்களும், நஷ்டத்தை தவிர்க்கவும், தனிப்பட்ட லாபம் கிடைக்கவும் தனியார் வலைதளங்களுக்கு படங்களை விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் கூறப்படுகின்றது.

மலிவு விலை சாம்சங்32 இன்ச் ஸ்மார்ட் டிவி: ரூ.999க்கு வாங்கும் முறை.!

தமிழ் ராக்கர்ஸ்களை நாடும் மக்கள்:

தமிழ் ராக்கர்ஸ்களை நாடும் மக்கள்:

மேலும் திரையங்களிலும் சென்று வரும் நேரம் செலவு, அதிக பட கட்டணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருப்பதை சுட்டிக் காட்டியும் பொது மக்கள் தமிழ்ராக்கர்ஸ் வலைதளங்களை நாடி செல்கின்றனர். அதில் குறிப்பிட்டபடி நேரத்தில் திரைப்படங்கள் வெளியாகின்றன. இதை குடும்பத்துடனும், தனிப்பட்ட முறையிலும் பொது மக்கள் பார்த்து ரசிக்கின்றனர்.

தமிழ் ராக்கர்ஸ் மீது கடும் கோபம்:

தமிழ் ராக்கர்ஸ் மீது கடும் கோபம்:

படம் வெளியாகும் முன்பும், வெளியான பிறகும் தங்களின் திரைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்துவதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகின்றது. இதனால் தமிழ் ராக்கர்ஸ் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர் தயாரிப்பாளர்கள் நடவடிக்கை எடுத்து தமிழ் ராக்கர்ஸ் இணைதளத்தை பல்வேறு முறை முடக்கினாலும், அது பல்வேறு பெயர்களில் வெளியாகி அதிர்ச்சியையும் தனிக்காட்டு ராஜாவாகவும் உலா வருகின்றது. தான் அறிவித்தபடி திரைப்படங்கள் வெளியாகும் தேதியில் ஹெச்சி தரத்திலேயே படங்களையும் வெளியிட்டு வருகின்றது.

வார்னஸ் பிரதர் நிறுவனம் புகார்:

வார்னஸ் பிரதர் நிறுவனம் புகார்:

இந்நிலையில், வார்னஸ் பிரதர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், தமிழ் ராக்கர்ஸ், இ,இசெட் டிவி, கேட்மூவிஸ், லைம்டொரன்ட்ஸ் போன்ற இணையதளங்கள், தாங்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை வெளியிடுவதால் பெரும் இழப்பு ஏற்படுகின்றது.

செயற்கைகோளில் தென்பட்ட ஏலியன் ஸ்பேஸ்ஷிப்-புகைப்படத்தை வெளியிட்ட நாசா.!

டிவி தொடர்- திரைப்படங்கள்:

டிவி தொடர்- திரைப்படங்கள்:

ஹாலிவுட் திரைப்படங்களையும், டிவி தொடர்களையும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் நருலா தமிழ் ராக்கர்ஸ் லைம்டோரென்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு தடை விதிக்குமாறு இணையதள நிறுவனங்களுக்கு இடைக் கால உத்தரவு பிறப்பித்தார். மேலும், இதுகுறித்து காப்புரிமைய மீறும் இணைதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் தொலைத் தொடர் துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கெத்து காட்டு தமிழ் ராக்கர்ஸ்:

கெத்து காட்டு தமிழ் ராக்கர்ஸ்:

புதுப்புது பெயரில் முளைத்து திரைப்படதுறை, தொலைத் தொடர்புதுறை பைசர் கிரைம் பிரிவு உள்ளிட்டவைகளுக்கு சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது போன்று முற்றிலும் தடை செய்ய முடியாத ஒன்றாக இருக்கின்றது. தமிழ் ராக்கர்ஸ் .cc, .to, .be, .pm, .ac, .la, .ws போன்ற பல்வேறு டொமைன்களில் தொடங்கப்பட்டு பின்னர் தடைசெய்யப்பட்டன.

சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது:

சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது:

“ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை ஆரம்பித்தவர்கள் குறித்த அடிப்படை தகவல்களை யார் வேண்டுமானாலும் இணையத்தில் தேடி (who’s data என்றழைக்கப்படுகிறது) தெரிந்துகொள்ளலாம். ஆனால், ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து ஒரு இணையதளத்தை பதிவு செய்பவர் நினைத்தால் கூடுதலாக சிலநூறு ரூபாய் கொடுத்து அவர்களது who’s தகவல்களை ரகசியமாக வைத்துக்கொள்ளும் வசதியை பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. எனவே, தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை நடத்துபவர்கள் குறித்த விவரங்களை பெறுவது இயலாத காரியம்”

வலைதளத்திற்கு வளைதளம் தாவுகின்றது:

வலைதளத்திற்கு வளைதளம் தாவுகின்றது:

தனிப்பட்ட சர்வரை வாங்கிவிட்டு ஸ்டாட்டிக் ஐபி முகவரியை வைத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் எண்ணற்ற இணையதளங்களை உருவாக்கும் முறையை கடைபிடிக்கப்படுகின்றது. தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை நடத்துபவர்களை கண்டுபிடிக்க முடியாது, புதிய டொமைன்கள் உருவாக்குவதை நிரந்தரமாக முடக்க முடியாது, சர்வதேச சட்டங்களை பயன்படுத்தியும் எதுவும் செய்யமுடியாது.

மெட்ரோ ரயில் நிலையத்தில் கசமுசா ஜோடி-ஆபாசதளத்தில் லீக்கான வீடியோ.!

என்ன செய்ய வேண்டும்:

என்ன செய்ய வேண்டும்:

பல்வேறு பெயர்களில் தமிழ்ராக்கர்ஸ் உதயமாகிக் கொண்டு இருக்கின்றது. அதுமட்டுமின்றி, பைரஸி இணையதளங்கள் மூலமாக பதிவிறக்கம் செய்யப்படும் மென்பொருள்களினால் ஒவ்வொரு ஆண்டும் மைக்ரோசாஃப்ட், அடோப் போன்ற நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான கோடிகளை இழந்து வருகிறது.

அதுவும் இதுவரை முற்றிலும் தடுக்கப்பட முடியாததாகவே உள்ளது. மக்கள் இதுபோன்ற தளங்களை நாடுவதற்கான காரணத்தை கண்டறிந்து அதை சரிசெய்வதற்கான முயற்சியில் திரையுலகம் ஈடுபட வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.