ரஜினியின் படத்திற்கு சம்பளம் தரவில்லை: கண்டுகொள்ளாத லைகா? ரேக்ஸ்!-Samayam Tamil

ரஜினியின் படத்திற்கு சம்பளம் தரவில்லை: கண்டுகொள்ளாத லைகா? ரேக்ஸ்!-Samayam Tamil

லைகா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 2.0. இப்படத்தில் எமி ஜாக்சன், அக்ஷய்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். மிகப்பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகளோடு உருவான இப்படம் 3 ஆண்டுகள் தயாரிப்பில் இருந்து வெளியானது. 2010ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்கப்பட்டது தான் 2.0. அந்த நேரத்தில் இந்திய சினிமாவிலேயே மிகப்பிரமாண்ட படைப்பாக உருவான படம் தான் எந்திரன்.

Also Read:
Nerkonda Paarvai: தல அஜித்தை மனதார பாராட்டிய ரஜினிகாந்த்!

இந்த இரண்டு படங்களுக்கும் சப்டைட்டில் பணிகளை மேற்கொண்ட ரேக்ஸ் அவர்கள் இன்னும் தனக்கு சம்பளம் வரவில்லை என டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல பெரிய படங்களுக்கு சப்டைடில் பணிகள் செய்து வரும் அவர் லைகா நிறுவனம் இதுவரை 2.0 படத்திற்கான சம்பளத்தை தரவில்லை என்று கூறியுள்ளார்.

Also Read:
தேசிய விருதுக்கு எதிராக குரல் உயர்த்திய தமிழ் கலைஞர்கள்!

மேலும் எந்திரன் படத்திற்கே இன்னும் தனக்கு சம்பளம் வரவில்லை என்றும் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: எந்திரன் படத்திற்கு எனக்கு சம்பளம் வரவில்லை என சன் பிகசர்ஸ்க்கு மெயில் அனுப்பினேன். ஏதோ நான் சொல்வது பொய் போல, நீங்கள் சொல்வது உண்மையா என விசாரித்து உங்களை தொடர்பு கொள்கிறோம் என்றனர். ஆனால் இது வரை தொடர்பு கொள்ளவில்லை. இதையறிந்த ஷஙகர் நண்பன் படத்திற்கு வேலைக்கு முன்னதாக சம்பளம் தந்தார். ஆனால் லைகா நிறுவனம் 2.0 படத்திற்கு இதுவரைக்கும் சம்பளம் தரவில்லை.

Also Read:
400 கலைஞர்களுக்கு தங்க மோதிரம் அன்புப் பரிசாக வழங்கிய தளபதி!

எனக்கு பின்னால் ஒரு பெரிய டீம் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு உரிய சம்பளத்தை நான் தரவேண்டும். இதில் இயக்குநரையோ, நடிகரையோ நான் குற்றம் சொல்ல விரும்பவில்லை. இது அவர்கள் வேலை கிடையாது. தயாரிப்பாளர் தான் இதை சரி செய்ய வேண்டும். பல முறை தொடர்பு கொண்டும் அவர்கள் பதிலளிக்காத காரணத்தால தான் நான் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தேன் என்று கூறியுள்ளார். சினிமாவில் மிகப்பெரிய நிறுவனமாக செயல்படுபவர்கள் இவ்வாறு நடந்துகொண்டிருப்பது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.