வயிற்று வலியால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற இளைஞரின் வயிற்றில் 452 உலோக பொருட்கள்: மருத்துவர்கள் அதிர்ச்சி | 452 metallic substances in the stomach of a young man who went to hospital for abdominal pain: trauma to doctors

ஆமதாபாத்: ஆமதாபாத்தில் வயிற்று வலியால் மருத்துவமனைக்கு சென்றவரின் வயிற்றிலிருந்து 452 உலோகப்பொருட்கள் நீக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த மருத்துவமனையின் மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் வயிற்று வலிக்காக 28 வயது வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளனர். அப்போது அவருடைய வயிற்றுக்குள் இரும்பு பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கண்டதும் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக அவருக்கு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவருடைய வயிற்றில் இருந்து இரும்பு பூட்டு, பின்கள், நகவெட்டி, நாணயம் உள்பட பல்வேறு உலோகங்கள் இருந்துள்ளது. சுமார் 4.5 கிலோ எடை கொண்ட 452 இரும்பு பொருட்கள் அகற்றப்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சோதனைக்கு பின் அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.