Tamil Nadu news today live updates : ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு

Tamil Nadu news today live updates : சென்னை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் பல இடங்களில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில், எழும்பூர், புரசைவாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, முடிச்சூர், அடையார், குரோம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணாநகர், மாதவரம், சோழிங்கநல்லூர் மற்றும் கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இதேபோன்று சென்னையை சுற்றியுள்ள தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், போரூர், நங்கநல்லூர் மற்றும் மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து … Read moreTamil Nadu news today live updates : ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு

வேலை நிறுத்தத்தில் குதித்த லாரி உரிமையாளர்கள்., காரணம் இது தான்!

மத்திய அரசு புதிதாக கொண்டுவரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள அபராத தொகையை குறைக்க வலியுறுத்தியும், லாரி தொழிலை மத்திய, மாநில அரசு பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தந்து ஆதரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் பேசுகையில், … Read moreவேலை நிறுத்தத்தில் குதித்த லாரி உரிமையாளர்கள்., காரணம் இது தான்!

’கல்யாண வீடு’ சீரியலில் பெண்களை துன்புறுத்திய விவகாரம்: அபராதத்துடன் மன்னிப்பு கேட்க உத்தரவு

Kalyana Veedu Seiral: ’மெட்டி ஒலி’ என்ற சீரியல் மூலமாக தொலைக்காட்சி ரசிகர்களிடம் நன்கு பரிச்சயமானவர் இயக்குநர் திருமுருகன். சன் டிவி-யில் ஒளிபரப்பான இந்த சீரியலை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இதற்கடுத்து, ’கார்த்திகை பெண்கள்’, ‘நாதஸ்வரம்’, ‘குலதெய்வம்’ உள்ளிட்ட சீரியல்களையும் இயக்கி, அவற்றை சன் டி.வி-யில் ஒளிபரப்பினார். தற்போது திருமுருகன் இயக்கத்தில், ‘கல்யாண வீடு’ எனும் சீரியல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த … Read more’கல்யாண வீடு’ சீரியலில் பெண்களை துன்புறுத்திய விவகாரம்: அபராதத்துடன் மன்னிப்பு கேட்க உத்தரவு

இந்தியா முழுவதும் குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப்படும் – அமித் ஷா

Abhishek Angad NRC across country : தற்போது அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டுவரப்பட்டு, 19 லட்சம் மக்கள் இந்திய வம்சாவளிகள் இல்லை என்றும் அவர்கள் வங்கத்தினர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில குடும்பங்களில் பெற்றோர்கள் இந்தியர்களாக இருக்க அவர்களின் பிள்ளைகள் வெளிநாட்டினராக கணக்கிடப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து பல்வேறு தரப்பில் இருந்தும் அம்மக்களைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. NRC across country இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தற்போது … Read moreஇந்தியா முழுவதும் குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப்படும் – அமித் ஷா

மு.க. ஸ்டாலினுக்குக் கொலை மிரட்டல்… வெட்டி வீழ்த்துவோம் என ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பாஜக நிர்வாகி…

  “இந்தி மொழியை ஆதரித்து இந்திக்கு எதிராக வீதியில் எவன் வந்தாலும் அவனை வெட்டி வீழ்த்துவோம். இந்தி எங்கள் உயிரடா!”  என்று ஃபேஸ்புக்கில் கருத்திட்ட பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த இந்தி தின நிக்ழ்ச்சியில் பேசிய பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழி அவசியம் என்றும், இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் கூறியிருந்தார். அவருடைய கருத்து சர்ச்சையானது. பல்வேறு மாநிலங்களும் அமித் ஷாவுக்கு எதிராகக் … Read moreமு.க. ஸ்டாலினுக்குக் கொலை மிரட்டல்… வெட்டி வீழ்த்துவோம் என ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பாஜக நிர்வாகி…

விலைக்கு விற்கப்படும் ‘பிகில்’பட ஆடியோ விழா டிக்கெட்டுகள்…கடும் எரிச்சலில் விஜய் ரசிகர்கள்…

இலவசமாக வழங்கப்பட வேண்டிய ‘பிகில்’பட ஆடியோ நிகழ்ச்சி டிக்கெட்டுகளை பட  நிறுவனம் மறைமுகமாக விலைக்கு விற்றுக்கொண்டிருப்பதால் விஜய் ரசிகர்களும் படக்குழுவினர் கடும் அதிருப்தியும் எரிச்சலும் அடைந்துள்ளனர். விஜய் நடிக்கும் பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னைக்கு அருகிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி அரங்கில் இன்று நடைபெறவுள்ளது.சுமார் எட்டாயிரம் பேர் அமரும் வகையில் அமைந்துள்ள பெரிய அரங்கம் அது. இந்நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா கலந்துகொள்வாரா இல்லையா என்பது தொடர்பாக ஒரு பெரிய பட்டிமன்றமே நடந்து வருகிறது. … Read moreவிலைக்கு விற்கப்படும் ‘பிகில்’பட ஆடியோ விழா டிக்கெட்டுகள்…கடும் எரிச்சலில் விஜய் ரசிகர்கள்…

லாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக்  பாஸ் இன்று !

பிக் பாஸ் சீசன் 3ல் இறுதி சுற்றுக்கு செல்வதற்கான போட்டி மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சென்ற வாரம் வரை சகோதரன், நண்பன் என பழகிய போட்டியாளர்கள். இறுதிச் சுற்றி டாஸ்கில் வெற்றி பெறுவதற்கான போட்டியில் எவருக்கும் விட்டுக்கொடுக்காமல் விளையாடி வருகின்றனர். அதன் படி இன்று நடைபெற்ற டாஸ்கில் லாஸ்லியாவை சாண்டி கீழே தள்ளுகிறார். இதனால் கோபமடையும் கவின் சாண்டியிடம் வாக்குவாதம் செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.   #Day88 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு … Read moreலாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக்  பாஸ் இன்று !

தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார் ராஜ்நாத் சிங்!

இந்திய தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  பறந்தார்.  கார்நாடகா மாநிலம் பெங்களூரில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேஜஸ் போர் விமானத்தில் ஏர் வைஸ் மார்ஷல் என்.திவாரியுடன்  விமானிகளுக்கான உடையில் பறந்தார்.  தேஜாஸ் இலகு ரக போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இவரே ஆவார். முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான தேஜாஸ் விமானம் மணிக்கு 2,205 கி.மீ வேகத்தில் பறக்கக்கூடிய திறன் … Read moreதேஜஸ் போர் விமானத்தில் பறந்தார் ராஜ்நாத் சிங்!

மும்பையில் வரலாறு காணாத கனமழை!

மும்பையில் கடந்த சில மாதங்களாக கன மழை பெய்து வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மும்பைக்கு ரெட் அலார்ட் விடுத்துள்ளது.  சாண்டாக்ரூஸ் ஆய்வு மையத்தின் தகவல் படி, கடந்த ஜூன் 1 முதல் செப் 18 வரை மும்பையில் 3,475.2 மிமி மழை பெய்துள்ளது. செப்டம்பர் மாதத்தின் முதல் 18 நாட்களிலேயே 921.3 மிமி மழை பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு வங்காள விரிகுடா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலத்தின் கடலோர … Read moreமும்பையில் வரலாறு காணாத கனமழை!

திருச்சி: துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட 1.433 கிலோ தங்கம் பறிமுதல்!

துபாயில் இருந்து விமானம் மூலம் கடத்தி வந்த சுமார் 1.433 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த மத்திய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இன்று காலை துபாயில் இருந்து திருச்சி வந்த இந்தியன் எக்ஸ்பிரக்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவுப்பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது சூலேமான் என்பவர் அனுமதியின்றி ஒரு பிரேசிலட்,, 5 வளையல்களை மறைத்து எடுத்து … Read moreதிருச்சி: துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட 1.433 கிலோ தங்கம் பறிமுதல்!