இந்த வருட இறுதியில் தமிழ் மொழியில் வெளியாகவுள்ள தபாங் 3!

இந்த வருட இறுதியில் தமிழ் மொழியில் வெளியாகவுள்ள தபாங் 3!

2009ல் சல்மான் கான் நடிப்பில் திரைக்கு வந்த ‘வான்டட்’ படத்தை இயக்கியிருந்தார்  பிரபுதேவா.  அதனையடுத்து 10 வருடங்களுக்கு பிறகு, தபாங் 3 திரைப்படத்தின் மூலம் மீண்டும் சல்மான் கானை நாயகனாக வைத்து  `தபாங் 3’ என்னும் திரைப்படத்தை பிரபுதேவா இயக்கி வருகிறார்.  `தபாங் 3’ படத்தின் படப்பிடிப்பு, மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த படத்தின் நாயகியாக சோனாக்‌ஷி சின்ஹா  நடித்து வருகிறார். 

இந்நிலையில் வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ள தபாங் 3 படத்தினை தமிழகத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியிடும் உரிமையை கே.ஜே. ஆர் ஸ்டூடியோஸ் பெற்றுள்ளது. மேலும் தபாங் படத்திற்கு தமிழகத்திலும் வரவேற்பு உள்ளதால், தபாங் 3 படத்தினை தமிழில் டப்பிங் செய்து வெளியிட கே.ஜே. ஆர் நிறுவனம் பணிகளை துவங்கியுள்ளது.  இந்த தகவலை கே.ஜே. ஆர் நிறுவனம்  தங்களுடைய  ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.