இன்றைய முக்கியச் செய்திகள்..

இன்றைய முக்கியச் செய்திகள்..

விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. 60 வயதை எட்டியவர்களுக்கு மாதம் 3 ஆயிரம் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம். ஜனவரி 10ஆம் தேதிக்கான பயணச்சீட்டுகளை விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்ததால் தத்தளித்த 39 பேர் மீட்பு.

நிதின் கட்கரியின் அறிவிப்பைத் தொடர்ந்து, அதிக அபராதம் விதிக்கும் வாகனச்சட்டத்திருத்தம் குறித்து பரிசீலித்து முடிவு செய்யப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி பேட்டி.

மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த முடியாது என மம்தா பானர்ஜி அறிவிப்பு.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

சந்திரயான்-2 குறித்து தொடர்ந்து கவலைப்படாதீர் என இஸ்ரோ தலைவர் சிவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஷ்மீருக்குள் ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளை அனுப்ப பாகிஸ்தான் முயற்சி.

ஜிம்பாப்வேவுக்கு எடுத்துவரப்பட்டது முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபேவின் உடல். அவரை அடக்கம் செய்வது தொடர்பாக முகாபேவின் குடும்பத்தினருக்கும் அரசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.