சூப்பரா நடிக்கிறாரு.. ரீலை ரியலோடு கம்பேர் பண்ணாதீங்க.. கவினுக்காக சேரனை விளாசும் நடிகை!

சூப்பரா நடிக்கிறாரு.. ரீலை ரியலோடு கம்பேர் பண்ணாதீங்க.. கவினுக்காக சேரனை விளாசும் நடிகை!


|

சென்னை: கவினின் காதலுக்கு ஆதரவாக நடிகை ஒருவர் சேரனை கடுமையாக விமர்சித்திருப்பது அவரது ரசிகர்களை கோமடைய செய்துள்ளது.

நடிகை காஜல், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாண்டியின் முன்னாள் மனைவி ஆவார். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக டிவிட்டரில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். குறிப்பாக கவினுக்கும் சாண்டிக்கும பெரும் ஆதரவு அளித்து வருகிறார்.

கவின் 4 பெண்களை காதலிப்பது போல் நடித்ததில் தப்பே இல்லை என சப்பைக்கட்டு கட்டினார். தொடர்ந்து லாஸ்லியா – கவின் காதல் விவகாரத்தில் சேரன் மூக்கை நுழைத்து வருகிறார் என சேரனை கடுமையாக விளாசி வந்தார்.

சமாதானம் செய்த சேரன்

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த லாஸ்லியாவின் அப்பா, கவினை காதலிக்கும் தனது மகளை கண்டித்தார். அனைத்தையும் தூக்கியெறியுமாறு கூறுகிறார். லாஸ்லியாவிடம் கோபப்படும் அவரை சேரன் சமாதானம் செய்தார்.

கண்டுபிடித்திருக்க மாட்டாரா?

கண்டுபிடித்திருக்க மாட்டாரா?

இதனை பார்த்த காஜல் சேரப்பா நடிக்கிறார் என்றார். அதற்கு பதிளித்த ரசிகர்கள் எப்படி நடிப்பு என்கிறீர்கள், லாஸ்லியாவின் அப்பாவும் எல்லாத்தையும் பார்த்துவிட்டுதான் வந்திருப்பார். நடிப்பு என்றால் அவருக்கு தெரியாதா? கண்டுபிடித்திருக்க மாட்டாரா? என கேட்டிருந்தார்.

நல்லாதான் நடிப்பாரு

நல்லாதான் நடிப்பாரு

அதற்கு பதிலளித்த நடிகை காஜல், சேரப்பா நடிப்பை குறை சொல்லவே முடியாது. தேசிய விருது வாங்கினவரு இல்லையா.. நல்லாதான் நடிப்பாரு, பாவம் அவங்க அப்பாவும் அவர் திறமையான நடிப்புல ஏமாந்து இருக்கலாம் என்று பதிலளித்துள்ளார்.

ஏற்றுக்கொள்ளக்கூடியது

மற்றொரு ரசிகரின் டிவிட்டுக்கு பதிலளித்துள்ள, காஜல், லாஸ்லியா அப்பா பாசம் 200% ஏற்றுக்கொள்ளக்கூடியது. அவளின் அப்பாவுக்கு நான் ஆதரவளிக்கிறேன். என்று கூறியுள்ளார்.

ரீலை ரியலோடு ஒப்பிடாதீர்கள்

மற்றொரு டிவிட்டில் எக்ஸ்க்யூஸ் மி.. நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க.. இப்பவும் சேரப்பா பாசம் உண்மை இல்லன்னுதான் சொல்றோம். சேரப்பா ஷோக்காக பண்றாரு.. லாஸ்லியா அப்பா பாசம், அக்கறைதான் உண்மைன்னு சொல்றோம். ரீலை ரியலோடு ஒப்பிடாதீர்கள். தயவு செஞ்சு முழிச்சுக்குங்க.. என பதிவிட்டிருக்கிறார் காஜல்.

விளாசும் ரசிகர்கள்

ஆனால் காஜலின் டிவிட்டை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக விளாசி வருகின்றனர். ஹலோ.. சேரப்பா லாஸ்லியாக்கிட்ட என்ன கிடைக்க போகுது- லாஸ்லியாவுக்கு எவ்ளோ ஃபேன் ஃபோலோயிங் இருக்குன்னு அவருக்கு எப்படி தெரியும்? சேரன் சார் ஏற்கனவே ஒரு டைர்க்டர் அவர்கிட்ட வேனும்னா லாஸ்லியா நடிக்கலாம். ஆனால் சேரன் சார் லாஸ்லியாகிட்ட ஏன் நடிக்கனும் என கேட்கிறார் இந்த நெட்டிசன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.