சூர்யாவிற்கு மீண்டும் அப்படி நடக்க கூடாது.. காத்திருக்கும் முக்கிய சிக்கல்.. எப்படி சமாளிப்பாரோ!?

சூர்யாவிற்கு மீண்டும் அப்படி நடக்க கூடாது.. காத்திருக்கும் முக்கிய சிக்கல்.. எப்படி சமாளிப்பாரோ!?


|

சென்னை: நடிகர் சூர்யா நடிக்கும் காப்பான் படத்திற்கு அவரே எதிர்பார்க்காத சிக்கல் ஒன்று காத்து இருக்கிறது.

நடிகர் சூர்யா தமிழகத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ஆனாலும் இவர் நடித்த சிங்கம் 2 படத்திற்கு பின் எந்த ஒரு படமும் சரியாக ஓடவில்லை.

சுமாரான வசூல் மட்டுமே சில படங்கள் வாங்கி இருக்கிறது. இன்னும் சில படங்கள் பிரேக் ஈவன் வசூல் கூட செய்ய முடியாமல் தோல்வியில் முடிந்த கதை எல்லாம் நடந்து உள்ளது.

என்ன படம்

சூர்யாவின் சினிமா வரலாற்றில் அதிக விமர்சனங்களை சந்தித்து மோசமாக தோல்வி அடைந்த படம் என்றால் கண்டிப்பாக அது மாஸ் மற்றும் அஞ்சான் ஆகிய படங்கள்தான். அதிலும் அஞ்சான் படம் மிக மிக மோசமான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அஞ்சான் எப்படி

அஞ்சான் எப்படி

அஞ்சான் படம் நல்ல கதை அம்சத்தை கொண்டு இருந்தாலும் மோசமான திரைக்கதையால் படுதோல்வி அடைந்தது. அஞ்சான் படம் 2014 ம் வருடம் ஆகஸ்ட் 15 தேதி ரிலீஸ் ஆனது. ஆனால் ஒரு வாரம் மட்டுமே தியேட்டரில் இந்த படம் ஓடியது குறிப்பிடத்தக்கது.

அதே நாள்

அதே நாள்

அதே சமயம் அஞ்சான் படத்துடன் சேர்த்து ஆர். பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் வெளியானது. இந்த படம் பார்த்திபனுக்கு பெரிய கம் பேக்காக அமைந்தது. அதேபோல் படமும் பெரிய அளவில் ஹிட் அடித்து நிறைய விருதுகள் வாங்கியது குறிப்பிடத்தக்கது. இரண்டு படங்களுக்கு இடையிலான ரேஸில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் வெற்றிபெற்றது.

இப்போது மீண்டும்

இப்போது மீண்டும்

இந்த நிலையில்தான் இப்போது மீண்டும் வரும் செப்டம்பர் 20ம் தேதி காப்பான் படம் வெளியாகிறது. அதே நாளில்தான் ஆர். பார்த்திபனின் ஒத்த செருப்பு படம் வெளியாக உள்ளது. ஆம் மீண்டும் இரண்டு பேரும் மோதிக்கொள்ள இருக்கிறார். ஒத்த செருப்பு படம் ஏற்கனவே டிரைலர், டீசர், பாடல் என்று எல்லாம் ஹிட் அடித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் இன்னொரு

ஆனால் இன்னொரு பக்கம் காப்பான் படத்தின் டிரைலர் எப்போதும் போல கே வி ஆனந்த் டைப் படம் போலவே இருக்கிறது. அரைத்த மாவை அரைத்தது போலவே இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஒரு சாராரை இந்த டீசர் கவர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மோதல்

மோதல்

இதனால் மீண்டும் ஒருமுறை பார்த்திபன் படத்துடன் மோதும் நிலைக்கு சூர்யா சென்று இருக்கிறார். அதனால் இந்த முறையும் சூர்யா படத்திற்கு அஞ்சானுக்கு ஏற்பட்டது போல அதே நிலைமை ஏற்படுமா? அல்லது இந்தமுறை தப்பி வரலாறு மாறி ஹிட் அடிக்குமா என்று பொறுத்திருந்தான் பார்க்கக் வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.