நிச்சயம்! காஞ்சிபுரம் நகரில் மின் துண்டிப்பு ஏற்படாது… ரூ.10 கோடியில் புதிய துணை மின் நிலையம்

நிச்சயம்! காஞ்சிபுரம் நகரில் மின் துண்டிப்பு ஏற்படாது… ரூ.10 கோடியில் புதிய துணை மின் நிலையம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் உள்ள மின் தட்டுப்பாட்டை தவிர்க்க, 10 கோடி ரூபாய் செலவில், கூடுதல் துணை மின் நிலையம் அமைக்கப்படுகிறது. அதற்காக, கேபிள் பதிக்கும் பணிகள் நடக்கின்றன.
காஞ்சிபுரம் மாவட்ட வடக்கு கோட்ட பகுதியில், 1.60 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்காக, ஓரிக்கை, பஞ்சுப்பேட்டை, வையாவூரில், துணை மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன.மின்வெட்டுகாஞ்சிபுரம் நகரில்,மின் தேவையும், மின் இணைப்புகளும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், சீரான மின்சாரம் கிடைக்காமல், அவ்வப் போது மின் துண்டிப்பு, மின்வெட்டு ஏற்படுகிறது.இதை தவிர்க்கவும், வரும் காலத்தில், நகரில் தடையின்றி மின்சாரம் வழங்கவும், மின் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இதற்காக, காஞ்சிபுரம்ரயில்வே சாலையில் இயங்கும், மின் வாரிய அலுவலகம் அருகில், புதிய துணை மின் நிலையத்திற்கான கட்டடம்கட்டப்பட்டுள்ளது.இந்த நிலையத்திற்கு, ஓரிக்கை துணை மின் நிலையத்தில் இருந்து, மிலிட்டரி சாலை, உத்திரமேரூர் சாலை, மேட்டுத் தெரு பஸ் நிலையம், பழைய ரயில் நிலையம் வழியாக, மின் கேபிள் பதிக்கப்படுகிறது.அதேபோல், பஞ்சுப்பேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து, மேற்கு ராஜவீதி, ரயில்வே சாலை வழியாக, புதிய துணை மின் நிலையத்திற்கு, நிலத்தில் மின் கேபிள் பதிக்கும் பணி நடக்கிறது.இப்பணி நிறைவடைந்த பின், நகரில், ஏதாவது ஒரு பகுதியில் மின் துண்டிப்பு ஏற்பட்டால், கேபிள் மூலம் எடுத்து வரப்படும் மின்சாரம், உடனடியாக அப்பகுதிக்கு அனுப்பப்படும்.இது குறித்து, காஞ்சி புரம் மின் பகிர்பான செயற்பொறியாளர், வி.சரவணதங்கம் கூறியதாவது:ஓரிக்கை, பஞ்சுப்பேட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து, கேபிள் மூலம், புதிய துணை மின் நிலையத்திற்கு, மின்சாரம் எடுத்து வரப்படும்.
கேபிள் பணி
இந்த கேபிள்களில் வருவது, உயர் அழுத்த மின்சாரம் என்பதால், அந்த பகுதியில் உள்ள மின் கம்பங்கள் வழியாக எடுத்து வர முடியாது. அதனால், நிலத்தில் கேபிள் பதிக்கப்படுகிறது.இரு துணை மின் நிலையங்களில் இருந்து வரும் மின்சாரத்தை, புதிய மின் நிலையத்தில், 11 கே.வி., மின்சாரமாக மாற்றும்.கேபிள் பதிக்கும் பணி இன்னும் இரு மாதங்களில் முடிந்து விடும். புதிய மின் நிலையத்திற்கான சாதனங்கள் வரவுள்ளன. அவை வந்ததும், புதிய துணை மின் நிலையம் செயல்பட துவங்கும்.வருங்காலத்தில், நகரில்ஏதேனும் ஒரு பகுதியில் மின் துண்டிப்பு ஏற்பட்டால், உடனடியாக மின்சாரம் வினியோகிக்க, இந்த வசதி செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.