நிர்வாக உத்தியோகத்தர்களின் பணிப் பகிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

நிர்வாக உத்தியோகத்தர்களின் பணிப் பகிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலங்கை நிர்வாக சேவை சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட 48 மணித்தியால பணிப் பகிஷ்கரிப்பு நேற்று நிறைவுபெற்றது.

இதன் காரணமாக பல அரச நிறுவனங்களின் சேவைகள் தடைப்பட்டிருந்தன. பொதுமக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டது. சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பணிப் பகிஷ்கரிப்பு இடம்பெற்றது.

பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட உறுப்பினர்களின் விசேட பொதுக் கூட்டம் கொழும்பில் இடம்பெற்றது. அதற்கு முன்னர் அமைச்சரிடம் தமது பிரச்சினைகள் உள்ளடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் செயலாளர் ரோஹண டி சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.