பொருளாதார இலக்கை அடைய மோடி அரசு என்ன செய்யப் போகிறது.. அபிஷேக் மனு சிங்வி கேள்வி!

பொருளாதார இலக்கை அடைய மோடி அரசு என்ன செய்யப் போகிறது.. அபிஷேக் மனு சிங்வி கேள்வி!

டெல்லி : மோடி அரசு தனது முதல் 100 நாள் சாதனைகளை பேசும் பல பாஜக தரப்பினர் ஒரு புறம், மறுபுறம் அதை எதிர்த்து கேள்விகளை தொடுத்து வரும் எதிர்கட்சிகள் மறுபுறம்.

அதிலும் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி, கேள்விகளை தொடுத்துக் கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், அபிஷேக் மனு சிங்வி, இந்தியா எப்போது 5 டிரில்லியன் டாலர் இலக்கை அடையும், இதற்காக மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்றும் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பொருளாதாரம் எப்போது $5டிரில்லியனை தொடும்?

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த அபிஷேக் மனு சிங்வி, மோடி ஜியை அவரது ட்விட்டர் பக்கத்தை தொடரும் நபர்கள் கூட 50 மில்லியனை தாண்டி விட்டனர். ஆனால் இந்திய பொருளாதாரம் எப்போது 5 டிரில்லியன் டாலர் இலக்கினை தொடும் என்றும், இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை, இதற்கும் எதிர்கட்சிகள் தான் பொறுப்பேற்க வேண்டுமா என்றும் கிண்டலாகவும், பல கேள்விகளை சரமாரியாக கேட்டுள்ளார்.

மோடினாமிக்ஸ் (Modinomics )

மோடினாமிக்ஸ் (Modinomics )

உபெர், ஓலா சேர்ந்து தான் இந்திய பொருளாதாரம் அனைத்தையும் அழித்துவிட்டதா? இதில் நல்ல விஷயங்கள் எது நடந்தாலும் அது உங்களால் தான் நடந்ததா என்றும், அதை மோடினாமிக்ஸ் (Modinomics ) என்றும், மேலும் எந்த மாதிரியான கெட்டது நடந்தாலும் அதற்கு பிறர் தான் காரணம், இது நிர்மலானாமிக்ஸ் (Nirmalanomics), பின் ஏன் எதற்காக மக்கள் உங்களை தேர்வு செய்தார்கள் இது பப்ளிக்னாமிக்ஸ் (Publiconomics) என அபிஷேக் மனு சிங்வி அதிரடியாக தனது கேள்விகளை தொடர்ந்து ட்விட்டரில் கேட்டுள்ளார்.

இது சரியான வாதமா?

இது சரியான வாதமா?

மேலும் கடந்த செவ்வாய்கிழமையன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியதை நினைவு கூறிய அபிஷேக், மக்கள் சொந்தமாக வாகனங்கள் வாங்குவதை விடுத்து, அதற்கு பதிலாக ஓலா, உபெரில் பயணம் செய்ததால் தான் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியடைந்துள்ளதா? இது சரியான வாதமா? இதனால் தான் ஆட்டோமொபைல் துறை இவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதா என்றும் கேள்விகளை தொடுத்துள்ளனர்.

ஆட்டோமொபைல் சரிவுக்கு இது தான் காரணமா?
 

ஆட்டோமொபைல் சரிவுக்கு இது தான் காரணமா?

ஆட்டோமொபைல் துறையில் உதிரி பாகங்கள் தயாரிக்கும், தொழில் பிஎஸ் 6 வருகையால் மிக மோசமான நிலைமையில் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியவர், சென்னையில் கடந்த செவ்வாய்கிழமையன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசியதை கூறியதோடு, மக்கள் ஆட்டோமொபைல் வாங்கும் செலவில், உபெர், ஓலாவை பயன்படுத்த விரும்புகின்றனர் என்றும் கூறியிருந்ததையும் கூறியுள்ளார். ஆட்டோமொபைல் துறையில் பல லட்சம் தங்கள் வேலையினை இழந்ததற்கும் எதிர்கட்சிகள் தான் காரணமா? என்றும் அதிரடியாக மத்திய அரசினை குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.