ப.சிதம்பரத்தை தொடர்ந்து பாரிவேந்தர் தான் மத்திய அரசின் அடுத்த குறி! ரகசியத்தை போட்டு உடைத்த ஹெச்.ராஜா!

ப.சிதம்பரத்தை தொடர்ந்து பாரிவேந்தர் தான் மத்திய அரசின் அடுத்த குறி! ரகசியத்தை போட்டு உடைத்த ஹெச்.ராஜா!

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக எச்.ராஜா பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் நாகை மாவட்டத்தில் கட்சி விழாவிற்கு வந்திருந்தார். நேற்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவரளித்த பேட்டியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது அவர், “இந்திய நாட்டின் பொருளாதாரத்தில் எந்தவித பாதிப்புமில்லை. நம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்து செல்வதற்கு பிரதமர் மோடி நிச்சயம் உழைப்பார் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

தற்போது ஏழை,எளிய விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் நகைக்கடனை அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் தடை செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊழல்வாதிகளான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அவர்களுக்கு அடுத்த படி தமிழகத்தில் கல்லூரி நடத்தி வரும் முக்கிய பிரமுகர் ஒருவர் 42 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்படுவார்” என்று சூசகமாக கூறிவிட்டு வெளியேறினார்.

எச்.ராஜாவின் பேச்சானது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.