மூன்றாம் தரப்பு தலையிட்டால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்: பாக். சொல்கிறது

மூன்றாம் தரப்பு தலையிட்டால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்: பாக். சொல்கிறது

இஸ்லமபாத்,
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கும், அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சர்வதேச அமைப்புகளில் அப்பிரச்சினையை எழுப்ப முயன்று வருகிறது. அதன் முயற்சிகளை இந்தியா முறியடித்து வருகிறது. 

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி, மூன்றாம் நபர் தலையிட்டால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- “ஐரோப்பிய நாடுகளுக்கு காஷ்மீரில் என்ன நடக்கிறது என்று நன்றாக தெரியும். ஆனால் அவர்கள் சில அரசியல் காரணங்களுக்காக இது குறித்து குரல் எழுப்ப மறுக்கிறார்கள்.
காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியாவிடம் பேச்சுவார்த்தை நடத்த பலமுறை முயற்சிகள் மேற்கொண்டோம். ஆனால் அவர்கள் எங்களது முயற்சிகளுக்கு எந்த விதமான நேர்மறை பதில்களையும் அளிக்கவில்லை.  எனவே, இந்தியாவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை.  மூன்றாவது நாடு தலையிட்டு சமரசம் செய்தால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முடியும்” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.