18ல் தபால் துறை குறைதீர் கூட்டம்

18ல் தபால் துறை குறைதீர் கூட்டம்

கோவை:தபால்துறை சார்பில், கோவை மண்டல அளவிலான, நுகர்வோர் குறைதீர் கூட்டம், வரும், 18ம் தேதி நடக்கிறது.ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மண்டல தலைமை தபால் அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு குறைதீர் கூட்டம் நடைபெறும். மணியார்டர், பதிவு தபால், பார்சல், காப்பீடு, விரைவு தபால், சிறுசேமிப்பு போன்ற தபால்துறை தொடர்பான புகார்களை, நுகர்வோர் நேரில் தெரிவித்து, நிவர்த்தி செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.