காலநிலை

காலநிலை

நாட்டில் தற்போதுநிலவும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் சில தினங்களுக்கு தொடரும் என வளிமண்டவியல்திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல்,சப்கரமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம்மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யலாம். சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனதிணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடியுடன் மழை பெய்யும் போதும் பலத்த காற்று வீசுக்கூடும். இடி,மின்னல் தாக்கங்களில் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.