சென்னை – ஆந்திர எல்லையில் அமைந்துள்ள கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை…

நாடு முழுவதும் கல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.  ஆந்திர மாநிலம் வரதய்யபாளையத்தில் கல்கி ஆசிரமம் மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. சாதாரண எல்.ஐ.சி. ஏஜென்டாக இருந்தவர் விஜயகுமார். இவர் தன் பெயரை கல்கி பகவான் என மாற்றிக்கொண்டதாகவும், புராணங்களில் கூறப்படும் கல்கி அவதாரம் தானே என கூறிக் கொண்டு ஆசிரமம் அமைத்து செயல்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. அவரது மனைவி புஜ்ஜம்மா தன்னை அம்மா பகவான் என்றும் பத்மாவதி தாயாரின் அவதாரம் … Read moreசென்னை – ஆந்திர எல்லையில் அமைந்துள்ள கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை…

நானோ காரை மீசையினால் இழுத்து சென்ற இளைஞர்…

சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் 700 கிலோ எடையுள்ள நானோ காரை ((NANO CAR)) தனது மீசையினால் சுமார் 50 அடி தூரம் இழுத்து சென்றார். இளம்பிள்ளை அருகேயுள்ள தாடிகாரனூர் பகுதியைச் சேர்ந்த கராத்தே நடராஜ் என்பவர் தனது வாழ்நாளில் 100 சாதனைகளை பண்ண வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டுள்ளார். தலைமுடியால் பொளிரோ காரை ((BOLERO CAR)) கட்டி இழுத்தும், விரல் நகங்களை கொண்டு சிலிண்டரை தூக்கியும், தலைகீழாக தொங்கியபடி ஒரு லிட்டர் தண்ணீரை குடித்தும் … Read moreநானோ காரை மீசையினால் இழுத்து சென்ற இளைஞர்…

திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் விசாரணை…

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம், திகார் சிறையில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்றதில் முறைகேடு நடந்திருப்பதாக சிபிஐயும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. அனுமதிக்கப்பட்டதைக் காட்டிலும் அதிக அளவு அந்நிய முதலீடு பெற்றுக் கொடுக்க ப.சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் உதவியதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், நீதிமன்றக் காவலில் … Read moreதிகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் விசாரணை…

பாகிஸ்தானை அடர் சாம்பல் பட்டியலில் வைக்க வாய்ப்பு…

பாரீசில் நடைபெறும் சர்வதேச நிதி கண்காணிப்பு கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் விதிக்கப்பட்டுள்ள சாம்பல் நிற பட்டியலில் இருந்து அந்நாடு அடர் சாம்பல் நிறப் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. அடர் நீலம் என்பது பாகிஸ்தானுக்கு நிலைமையில் முன்னேற்றம் காண்பதற்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பாகும். இதனால் பாகிஸ்தானுக்கு உலக வங்கி, ஐ.எம்.எப். ஐரோப்பிய யூனியன் போன்றவை நிதியளிக்க மறுக்கலாம். இதையடுத்து கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்பட்டால் அதற்கு சர்வதேச அளவில் நிதி பெற முடியாத நெருக்கடி … Read moreபாகிஸ்தானை அடர் சாம்பல் பட்டியலில் வைக்க வாய்ப்பு…

அமெரிக்கா விட்டுச் சென்ற சிரியா எல்லைப் பகுதிக்கு ரஷ்ய ராணுவம் விரைந்தது | Tamil News patrikai | Tamil news online

சிலான்பினார், துருக்கி துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப் பகுதியில் அமெரிக்க ராணுவம் இருந்த இடத்துக்கு ரஷ்ய ராணுவம் சென்றுள்ளது. சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை அடக்க அமெரிக்கா மற்றும் ரஷ்ய ராணுவத்தினர் அரசுக்கு உதவி செய்து வந்தனர்.  தற்போது ஐஎஸ் தீவிரவாதிகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில்  அமெரிக்கா தனது ராணுவத்தை திரும்பப் பெற்றுக் கொண்டது.  துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் இருந்த குர்து இனப் போராளிகளுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வந்தது. அமெரிக்கப்படை திரும்பியதையொட்டி குர்துக்கள் மீது துருக்கி … Read moreஅமெரிக்கா விட்டுச் சென்ற சிரியா எல்லைப் பகுதிக்கு ரஷ்ய ராணுவம் விரைந்தது | Tamil News patrikai | Tamil news online

தமிழ்நாடு முழுவதும் ‘டெங்கு’ காய்ச்சலால் 3000 பேர் பாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் ‘டெங்கு’ காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும் டெங்கு காய்ச்சல் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. அரசு ஆஸ்பத்திரி மட்டுமின்றி தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் மட்டும் 792 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் 500 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள … Read moreதமிழ்நாடு முழுவதும் ‘டெங்கு’ காய்ச்சலால் 3000 பேர் பாதிப்பு

பிரதமர் மோடிக்கு தமிழகத்தில் இத்தகைய வரவேற்பா?

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பொது மக்கள் ஆரவாரமாக வரவேற்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ, தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.  உண்மையில் வைரல் வீடியோ 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வீடியோ குஜராத் மாநிலத்தில் எடுக்கப்பட்டதாகும். எடிட் செய்யப்பட்ட வீடியோவின் பின்னணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பையொட்டி சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் சென்னை … Read moreபிரதமர் மோடிக்கு தமிழகத்தில் இத்தகைய வரவேற்பா?

ஆங்கிலேயரை அச்சுறுத்திய வீரபாண்டிய கட்டபொம்மன்

ஆங்கிலேயரை அச்சுறுத்திய வீரபாண்டிய கட்டபொம்மன் [email protected] 12:34:04 *இன்று (அக்.16) வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் வீரபாண்டிய கட்டபொம்மன். பெயரை கேட்டாலே வீரவரலாறும், அந்த திரைப்பட காட்சியும் மனதில் விரிகிறதா…? ‘‘வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது… உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் கித்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா…? மானங்கெட்டவனே… யாரைக்கேட்கிறாய் வரி… எவரை கேட்கிறாய் வட்டி? திரைப்படத்துக்காக எழுதப்பட்டாலும், ஆங்கிலேயருக்கு எதிராக நெஞ்சில் வீரத்துடன், துணிவுடன் போராடியவர்தான் வீரபாண்டிய கட்டபொம்மன். இன்றுதான் அவர் தூக்கலிடப்பட்ட … Read moreஆங்கிலேயரை அச்சுறுத்திய வீரபாண்டிய கட்டபொம்மன்

நீட் ஆள்மாறாட்ட மோசடியில் மேலும் 19 மாணவர்கள் மீது சந்தேகம்: சி.பி.சி.ஐ.டி. உயர்நீதிமன்றத்தில் தகவல்

நீட் ஆள்மாறாட்ட மோசடியில் மேலும் 19 மாணவர்கள் மீது சந்தேகம்: சி.பி.சி.ஐ.டி. உயர்நீதிமன்றத்தில் தகவல் [email protected] 12:33:40 சென்னை: நீட் ஆள்மாறாட்ட மோசடியில் மேலும் 19 மாணவர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி. உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Tags: நீட் ஆள்மாறாட்டம் மோசடி 19 மாணவர்கள் சந்தேகம் சி.பி.சி.ஐ.டி. உயர்நீதிமன்றம் தகவல்

மித்தாலி ராஜூக்கு தமிழ் தெரியாது எனக்கூறிய ரசிகருக்கு தமிழ் என் தாய் மொழி என தமிழில் ட்வீட் செய்து மித்தாலி ராஜ் பதிலடி

மித்தாலி ராஜூக்கு தமிழ் தெரியாது எனக்கூறிய ரசிகருக்கு தமிழ் என் தாய் மொழி என தமிழில் ட்வீட் செய்து மித்தாலி ராஜ் பதிலடி [email protected] 12:30:41 ராஜஸ்தான்: மித்தாலி ராஜூக்கு தமிழ் தெரியாது எனக்கூறிய ரசிகருக்கு தமிழ் என் தாய் மொழி என தமிழில் ட்வீட் செய்து மித்தாலி ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி பிறந்தவர் மித்தாலி ராஜ். இவரின் தந்தை துரைராஜ் நாகப்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். … Read moreமித்தாலி ராஜூக்கு தமிழ் தெரியாது எனக்கூறிய ரசிகருக்கு தமிழ் என் தாய் மொழி என தமிழில் ட்வீட் செய்து மித்தாலி ராஜ் பதிலடி