இந்தா முடிஞ்சதுல…. 49 பிரபலங்கள் மீதான வழக்கு திரும்பபெறப்படும்: பிகார் காவல்துறை-Samayam Tamil

இந்தா முடிஞ்சதுல…. 49 பிரபலங்கள் மீதான வழக்கு திரும்பபெறப்படும்: பிகார் காவல்துறை-Samayam Tamil

49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரபல வரலாற்று எழுத்தாளர் ராமச்சந்திர குஹா, இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட சுமார் 49 பிரபலங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

அந்த கடிதங்களில், இந்திய நாட்டில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் ஒடுக்குமுறைகளை குறைக்க வேண்டும் என்றும், தொடர்ந்து மதத்தின் பெயரால் நடத்தப்படும் வன்முறைகள் குறைக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இவர்கள் 49 பேர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற கதிர்குமார் ஓஜா என்ற வழக்கறிஞரின் மனுவை ஏற்று முசாபர்பூரில் , இந்த 49 பேர் மீதும் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்று அரசியல் களத்தில் இந்த நிகழ்வு பார்க்கப்பட்டது.

இந்நிலையில், 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற பிகார் காவல்துறை முடிவு செய்துள்ளது.

புகார் அளித்த நபர் தவறான தகவல்களை அளித்துள்ளார் என்பதை பிகார் காவல்துறை கண்டுபிடித்துள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிகார் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.