பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து புலம்பெயர்ந்தோருக்கு மத்திய அரசின் ஜாக்பாட் அறிவிப்பு !!-Samayam Tamil

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து புலம்பெயர்ந்தோருக்கு மத்திய அரசின் ஜாக்பாட் அறிவிப்பு !!-Samayam Tamil

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த 370-ஆவது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அத்துடன், இம்மாநிலத்தை ஜம்மு, லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிரிவினைவாதிகள் மற்றும் பாகிஸ்தானிலிருந்து அவ்வப்போது வாலாட்டி வரும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளால் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாதவண்ணம் இம்மாநிலத்தில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

மறுபுறம், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.

அதில், ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் பூர்வீக குடிகளான பண்டிட்டுகளை மீண்டும் அங்கு மறுகுடியமர்த்துவது, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது, சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது போன்ற முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷன்தாரர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு!!

இதன் மற்றொரு முக்கிய அம்சமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலிருந்து, ஜம்மு -காஷ்மீர் அல்லாத, பிற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த 5,300 -க்கு மேற்பட்ட குடும்பங்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

“இவர்களும் ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்களாகவே கருதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இவர்கள் இதுநாள் வரை அவ்வாறு கருதப்படவில்லை.

இந்த வரலாற்று பிழையை திருத்தி, இந்த 5,300 குடும்பங்களையும் ஜம்மு -காஷ்மீரிலிருந்து புலம்பெயர்ந்தவர்களாக கருதி, இக்குடும்பங்கள் அனைத்தும் தலா 5.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்துக்கான பிரதமரின் வளர்ச்சித் திட்ட நிதியிலிருந்து இந்த இழப்பீடு வழங்கப்படும்” என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.