“அன்புபணி” இராமதாசா? ஒருவேளை பிரதமரோட அட்மினா இருக்குமோ: நெட்டிசன்கள் கலாய்!-Samayam Tamil

“அன்புபணி” இராமதாசா? ஒருவேளை பிரதமரோட அட்மினா இருக்குமோ: நெட்டிசன்கள் கலாய்!-Samayam Tamil

டெல்லி: பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து பதிவிடப்பட்டுள்ள ட்வீட்டில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பெயர் தவறாக பதிவிடப்பட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க பாஜக முயன்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனிடையே இந்தி தின கொண்டாட்டத்தின் போது, பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவின் அடையாளமாக ஒரேயோரு மொழி இருக்க வேண்டும். இந்தி மொழி தான் அந்த அடையாளத்தை கொடுக்கும் என்றார்.

தமிழை இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்கிட வேண்டும்- பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை!

அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, இந்தி எதிர்ப்பு போராட்டம் பெரிய அளவில் நடந்த தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பலைகள் கிளம்பின. நாங்க ஏன் இந்தி கத்துக்கனும். நீங்க தமிழ் கத்துக்கோங்க. எங்களுக்கு வேண்டும் என்றால் இந்தி கற்று கொள்வோம். அதனை திணிக்க வேண்டாம் என சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

பொது மொழி என்ன ரஜினி சார்?-அமைச்சர்: இங்கிலீஷ் தான் பொதுமொழி: கண்டறிந்த கமல்!

இந்நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சுமார் 29 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும். கோதாவரி – காவிரி ஆறுகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடியை பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் டெல்லியில் சந்தித்து பேசினர்.

இதற்கு பின்னர் சந்திப்பு குறித்த தகவலை ஆங்கிலத்திலும், தமிழிழும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ”அன்புமணி” என்பதற்கு பதிலாக ”அன்புபணி” என்று பதிவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தி குறித்த மத்திய அரசின் போக்கிற்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், பிரதமரின் தவறான இந்த பதிவை கையில் எடுத்துக் கொண்டுள்ள நெட்டிசன்கள், இது எதேனும் குறியீடா அல்லது பிரதமரின் அட்மின் பதிவிட்டு விட்டாரா? என கலாய்த்து வருகின்றனர்.

முதலில் நீங்கள் சரியான தமிழில் பதிவிடுங்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் தமிழில் உண்டு என கூறும் சில நெட்டிசன்கள், திராவிட கட்சிகளுடன் ஒருநாளும் கூட்டணி இல்லை என கூறி வந்த கட்சியும், பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த கட்சியுமான பாமக அக்கட்சிகளுடனே கூட்டணி அமைத்ததை சுட்டிக் காட்டி, பிரதமரின் அன்புக்கு கட்டுப்பட்டு பணி புரிபவர் அன்புமணி என்பதால் அன்புபணி என பதிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர். நெட்டிசன்கள் கலய்த்ததை தொடர்ந்து தவறான அந்த பதிவு நீக்கப்பட்டு சந்திப்பு குறித்த புதிய ட்வீட் பதிவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.