இனிமேல் ஒரு போன் காலுக்கு 6பைசா: இலவசம் கிடையாது: ஜியோ அதிரடி அறிவிப்பு.!

இனிமேல் ஒரு போன் காலுக்கு 6பைசா: இலவசம் கிடையாது: ஜியோ அதிரடி அறிவிப்பு.!

தற்சமயம் ஜியோ நிறுவனம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, அது என்னவென்றால் ஒரு போன் காலுக்கு 6பைசா கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக டிராய் அமைப்பின் வலுக்கட்டாயமான அறிவுறுத்தலை அடுத்து ஜியோ நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இனிமேல் ஒரு போன் காலுக்கு 6பைசா: இலவசம் கிடையாது: ஜியோ அறிவிப்பு.!

செல்போன் பயன்பாடு அதிகமான ஒரு காலத்தில் ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல், ஏர்செல், ஐடியா போன்ற நிறுவனங்கள் குறிப்பிட்ட சலுகைகளை மட்டும் வழங்கி அதிகளவு லாபாம் பெற்று வந்தன. ஆனால் ஜியோ நிறுவனம் அனைத்து நிறுவனங்களுக்கும் போட்டியாக களமிறங்கியதும், டேட்டா சலுகை, இலவச கால் அழைப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் குறைவான விலையில் வழங்கியது. பின்பு இந்தியாவில் அதிகளவில் வாடிக்கையாளர்களை கொண்ட ஒரே நிறுவனமும் ஜியோ தான்.

ஜியோ அறிமுகமான சமயத்தில், மக்கள் ஏற்கெனவே ஒரு சிம் வைத்திருந்த போதும் கூடுதலாக ஜியோ சிம் வாங்கி பயன்படுத்த தொடங்கினர். அதாவது இன்கம்மிங் கால்களுக்கு ஏற்கெனவே வைத்திருந்த சிம் கார்டுகளை அவுட் கோயிங் கால்களுக்கு ஜியோ சிம்மையும் பயன்படுத்தினார்கள். இதுதான் மற்ற நெட்வொர்க்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை உருவாக்கி சரிவை ஏற்படுத்தியது. இதில் நஷ்டத்தை தாஙக முடியாமல் ஏர்செல் நிறுவனம் தனது சேவை நிறுத்திக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்மையில் ரிங் ஆகும் நேரத்தை குறைத்து மற்ற நிறுவனங்களுக்கு கோபத்தை மூட்டியது ஜியோ நிறுவனம். ரிங் ஆகும் நேரத்தை குறைத்தால் மற்ற நெட்வொர்க் கால்கள் மிஸ்டு கால் ஆக மாறி ஜியோ வாடிக்கையாளர் அவுட் கோயிங் செய்யும் நிலை உருவாகும்.

ஜியோவில் இருந்து இன் கம்மிங் கால் வந்ததால் அதனை எதிர்கொள்ளும் நிறுவனங்கள் 6பைசா கொடுக்க வேண்டியிருக்கும், இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான டிராய் இடம் அவர்கள் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோவிற்கு ட்ராய் புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

இந்நிலையில், இன்று ஒரு போன் காலுக்கு 6பைசா வசூலிக்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அது என்னவென்றால் ஜியோ சிம் கார்டில் இருந்து மற்றொரு

ஜியோ சிம்மிற்கு போன் செய்தாலோ, லேன் லைண்ட்க்கு போன் செய்தாலோ இந்த கட்டணம் கிடையாது. அதேபோல் வாட்ஸ்ஆப், பேஸ்டைம் உள்ளிட்ட கால்களுக்கும் கட்டணம் கிடையாது. வழக்கம் போல் மற்ற நெட்வொர்கில் இருந்து வரும் கால்கள் இலவசம்தான்.

பின்பு ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களின் சிம் கார்டுகளுக்கு கால் செய்தால் 6பைசா வசூலிக்கப்படும் என ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் வாய்ஸ்கால்-க்கு செலுத்தும் இந்த கட்டணத்திற்கு இணையாக டேட்டா இலவசமாக வழங்கப்படும் எனவும் ஜியோ தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.