இமயமலையின் முகம் அவள்.. முதல்முறையாக சோகம் மறந்து சிரிக்கிறாள்.. வாங்க ரசிக்கலாம்

இமயமலையின் முகம் அவள்.. முதல்முறையாக சோகம் மறந்து சிரிக்கிறாள்.. வாங்க ரசிக்கலாம்

இமயமலையின் முகம் அவள்.. முதல்முறையாக சோகம் மறந்து சிரிக்கிறாள்.. வாங்க ரசிக்கலாம்

|

  WATCH VIDEO : Top 10 must-visit places in Kashmir

  ஸ்ரீநகர்: இமயமலை ஒரு தேவதை என்றால் ஜம்மு காஷ்மீர் அவளின் முகம். பேரழகி அவள். ஆனால் அந்த முகத்திற்கு பின் ஆயிரம் சோகங்கள் இருந்தாலும், இன்று தான் சோகம் மறந்து முதல்முறையாக சிரிக்கிறாள். வாங்க அவளை போய் பார்த்து வருவோம். ஆம் அசாதாரண சூழலுக்கு பிறகு முதல் முறையாக தடை விலக்கப்பட்டுள்ளதால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இன்று முதல் தாராளமாக சுற்றுலா செல்லலாம்.

  இந்தியாவின் சுவிட்சர்லாந்து ஏற்று போற்றப்படும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கடந்த 70 ஆண்டுகளாக தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் சிக்கி மரண ஓலங்களால் சிக்கி திணறி வந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடி போராடி வருவதே இதற்கு முக்கிய காரணம்.

  இன்னொரு காரணம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து. இதன் காரணமாக மற்ற இந்தியர்கள் அங்கு நிலம் வாங்க முடியாது. இதன் காரணமாக வெளிமாநிலத்தவர்கள் முதலீடு செய்ய தயங்கினர்.

  என்னதிது.. நடு ரோட்டுல வெள்ளையா.. பேயா இருக்குமோ.. நானே வருவேன்.. கேரள காட்டிலிருந்து ஒரு அலறல்!

  கட்டுப்பாடுகள் தளர்வு

  கட்டுப்பாடுகள் தளர்வு

  இந்நிலையில் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க கடந்த இரண்டு மாதங்களாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. சிறப்பு அந்தஸ்து ரத்து மூலம் இந்தியாவின் மற்ற மாநிலங்களைப்போல் ஒரு பகுதியாக மாறியது ஜம்மு காஷ்மீர்.

  இணைசேவை மட்டும் இல்லை

  இணைசேவை மட்டும் இல்லை

  67 நாட்கள் அசாதாரண சூழலுக்கு பிறகு இப்போது அந்த தடை முற்றிலும் விலக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் இனி தாராளமாக காஷ்மீருக்கு வந்து செல்லலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் இணைய சேவைகள் இன்று வரை செயல்பாட்டுக்கு வரவில்லை. அதேநேரம் லேண்ட்லைன் சேவைகள் செயல்படுகின்றன.

  மயக்கும் தால் ஏரி

  மயக்கும் தால் ஏரி

  எனவே தடைகள் இல்லாததால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இன்று முதல் தாராளமாக சுற்றுலா செல்லலாம். அங்கு ஏரளாமான சுற்றுலா தளங்கள் உள்ளன. இமயமலை ஒரு தேவதை என்றால் ஜம்மு காஷ்மீர் தான் அதன் முகம். அவ்வளவு அழகாக இருக்கும். அவளிடம் உள்ள ஆப்பிள் தோட்டங்களும், தால் ஏரியும் நிச்சயம் உங்களை மயக்கி அங்கேயே தங்க வைத்துவிடும்.

  தேவதையின் கலகலப்பு

  தேவதையின் கலகலப்பு

  10வது படித்துவிட்டு நாடு தான் என் தெய்வம் என்று வீரத்தோட ஓடிச்சென்று எல்லைச்சாமிகளாக நம் தமிழ் பிள்ளைகள் குடியிருக்கும் சுவிட்சர்லாந்து தான் ஜம்மு காஷ்மீர். இனி மயான அமைதியை மறந்து நம் பிள்ளைகளோடு காஷ்மீர் தேவதையும் கலகலப்பாக இருப்பாள் என்று நம்புவோம்.

  48 சுற்றுலா தளங்கள்

  48 சுற்றுலா தளங்கள்

  ஜம்மு காஷ்மீரில் காணும் இடம் எல்லாம் அழகு தான் என்றாலும், 48க்கும் மேற்பட்ட மிகப்பெரிய ஏன் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தளங்கள் இருக்கின்றன. அதில் முதன்மையானது ஸ்ரீநகர், இரண்டாவது லென் லடாக் மூன்றாவதாக சொல்வதென்றால் வைஷ்ணவி தேவி கோயில், 4வதாக சொல்வதென்றால் குல்மார்க் ஆகியவற்றை சொல்லலாம்.

  ஜம்மு- பாட்னிடாப்

  ஜம்மு- பாட்னிடாப்

  இதேபோல் அமர்நாத் குகை, ஜம்மு, பாட்னிடாப், பாகல்ஹாம், சோனாமார்க், லமாயுரு, நுப்ரா பள்ளத்தாக்கு, ஹெமிஸ், சனாசார். அனந்த்நாக், கார்கில், தசிகாம் தேசிய பூங்கா, புல்வாமா, கிலன்மார்க், டிராஸ், பல்டால், பதர்வாக், பன்காங் ஏரி என இன்னும் பல இடங்கள் உள்ளன. இவற்றை ரசிக்க ஒவ்வொரு ஊருக்கும் குறைந்த பட்சம் ஒரு நாளாவது தேவை. எல்லா வார்த்தைகளையும் ஆங்கிலத்தில் அடித்து கூகுளில் பாருங்கள். ஒவ்வொன்றும் எத்தனை அழகு என்பது உங்களுக்கே தெரியும்.

  பாகிஸ்தான ஆசைப்படுகிறது

  பாகிஸ்தான ஆசைப்படுகிறது

  இப்படி பேரழகியான காஷ்மீரின் அழகில் மயங்கி கிடக்கும் பாகிஸ்தான் அதை மொத்தமாக கைப்பற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டதில் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. பேரழகிகள் இருந்தால் அவர்களை அடைய நாட்டையே அழித்த மன்னர்கள் வாழ்ந்த உலகம் இது. ஒரு தேசமே பேரழியாக இருப்பதால்தான் இவ்வளவு காலம் பேராபத்தை எதிர்கொண்டது காஷ்மீர். இந்தியாவின் பிள்ளை தான் நீ. இனி யாரும் உன்னை உரிமை கோர முடியாது என்று அந்த அழகியிடம் சொல்லி 67 நாட்கள் தான் ஆகிறது. உலகமும் உணர்ந்து கொண்டது இந்த 67 நாட்களில்..

  வாங்க வரவேற்போம்

  வாங்க வரவேற்போம்

  இவ்வளவு கால அசாதாரண சூழலுகு பிறகு இன்று தான் முதல்முறையாக அவளிடம் இருந்து சிரிப்பு வந்திருக்கிறது. ஆம் சுற்றுலாவிற்கு விதிக்கப்பட்ட தடை 67 நாட்களுக்கு பின் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. அவளின் சிரிப்பையும் அழகையம் வாங்க போய் பார்த்திடுவோம். முடிஞ்சா இரண்டு வீடு வாங்கி போட்டு பியூட்டிபுல் காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர் என ஹாயாக பாட்டுப்பாடி அங்கேயே இனி தங்கி டூரிஸ்டுகளை வரவேற்போம்.

  Leave a Comment

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.