உலகத் தரம் வாய்ந்த 50 ரயில் நிலையங்கள்!!-Samayam Tamil

உலகத் தரம் வாய்ந்த 50 ரயில் நிலையங்கள்!!-Samayam Tamil

மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் வரும் ரயில்வே கழகத்தின் தலைவர் வி.கே. யாதவ் சமீபத்தில் மத்திய ரயில்வே அமைச்சரை தனியார் ரயில்கள் விடுவது தொடர்பாக சந்தித்துப் பேசினார்.

சந்திப்புக்குப் பின்னர் அவர் விடுத்து இருந்த அறிக்கையில், “https://tamil.samayam.com/”நாட்டில் மொத்தம் 400 ரயில் நிலையங்கள் உலகத் தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்று திட்டமிடப்பட்டு, இதுவரை சில ரயில் நிலையங்கள் தவிர மற்ற ரயில் நிலையங்களில் நிறைவேற்ற முடியாமல் உள்ளது.

இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சரிடம் விரிவாக பேசியுள்ளேன். உடனடியாக 50 ரயில் நிலையங்களை உலகத் தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். நாட்டில் சமீபத்தில் 6 விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்பட்டன. ரயில்வேயிலும் தனியார்மயத்தை துரிதப்படுத்த செயலாளர்கள் மட்டத்தில் அதிகாரம் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

இந்தக் குழுவில் தலைமை செயல் அதிகாரி, நிதி ஆயோக், ரயில்வே கழகம், செயலாளர், பொருளாதார விவகாரத்துறை, ஹவுசிங் மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சக செயலாளர் என அனைவரும் இடம் பெற்று இருக்க வேண்டும். ரயில்வேயை தனியார் மயமாக்குவதற்கான திட்டங்களை இந்தக் குழு துரிதப்படுத்த வேண்டும்.

வந்தாச்சு… நாட்டின் முதல் தனியார் ரயில்; அப்படியென்ன சிறப்பு- உங்களுக்கு தெரியுமா?

ரயில்வேயில் தனியாரைக் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் இந்திய ரயில்வே இறங்கியுள்ளது. முதல் கட்டமாக பயணிகளுக்கான 150 தனியார் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் முதல் தனியார் ரயில் தேஜஸ்…. என்னென்ன ஸ்பெஷல்?!

ரயில் நிலையங்களை உலகத் தரத்திற்கு உயர்த்துவது மற்றும் தனியார் ரயில்களை இயக்குவது ஆகிய இரண்டு திட்டங்களை விரைவில் நிறைவேற்ற, இந்த திட்டக் குழுவில் ரயில்வே பொறியாளர்கள் கழகத்தின் உறுப்பினர்கள், போக்குவரத்து ரயில்வே கழக உறுப்பினர்கள் இணைய வேண்டியது அவசியம். இவற்றை கருத்தில் கொண்டு ரயில்வே விரைவில் முடிவு எடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது”https://tamil.samayam.com/” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.