எல்பிட்டிய பிரதேச சபைத் தேல்தல் முடிவுகள் நாளை – பெறுபேறுகள் இரவு 9.00 மணிக்கு

எல்பிட்டிய பிரதேச சபைத் தேல்தல் முடிவுகள் நாளை – பெறுபேறுகள் இரவு 9.00 மணிக்கு

நாளை நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அதிகாரி கே.யூ.சந்திரலால் தெரிவித்தார்.

நாளைய தினம் இந்த பிரதேச சபை அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்காக 47 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. இந்த வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பிற்கு மத்தியில் அனுப்பி வைக்கப்பட்டதாவும் அவர் தெரிவித்தார்.

ஒரு மத்திய நிலையத்தில் 5 முதல் 7 தேர்தல் அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 750 அரச ஊழியர்கள் தேர்தல் பணிகளில் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

இந்த நிலையங்களில் தலா 4 பொலியார் வீதம் கடமையில் ஈடுபட்டுள்ளனர். பிரதேச சபைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் 800 பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக பொலிஸ் நடமாடும் பாதுகாப்பு சேவைகளும் இடம்பெறுகின்றன.

47 மத்திய நிலையங்களில் அளிக்கப்படும் வாக்குகள் நாளை மாலை 7.00 மணியளவில் எண்ணப்பட்டுவிடும் என்று தெரிவித்த அவர் இரவு 10 மணியளவில் அனைத்து முடிவுகளையும் அறிவிக்கக்கூடியiதாக இருக்கம் என்று காலி மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அதிகாரி கே.யூ.சந்திரலால் தெரிவித்தார்.

53,384 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த பிரதேச சபைக்காக 28 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். தொகுதி அடிப்படையில் 11 அங்கத்தவர்களும், விகிதாசார வாக்களிப்பிற்கு அமைவாக 17 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.