சியோமியை தூக்கி சாப்பிட போகும் அடுத்த ரியல்மி ஸ்மார்ட்போன் இதுதான்!-Samayam Tamil

சியோமியை தூக்கி சாப்பிட போகும் அடுத்த ரியல்மி ஸ்மார்ட்போன் இதுதான்!-Samayam Tamil

பட்ஜெட் விலைப்பிரிவின் பிரீமியம் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கு பெயர்போன சியோமி நிறுவனத்தின் அடிச்சுவட்டை பின்பற்றிய ரியல்மி நிறுவனம் ஆனது, ரெட்மி போன்ற ஸ்மார்ட்போன்களுடன் தாக்கு பிடிக்காது என்றே நினைத்தோம், பின்னர் யாரையும் அவ்வளவு லேசாக எடை போடா கூடாது என்கிற பாடத்தை கற்றோம்.

ஆம், இப்போது சியோமி என்கிற பெயருக்கு ஈடாக ரியல்மி என்கிற பெயரானது சந்தையில் ஒலிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ரியல்மி நிறுவனத்தின் எக்ஸ் தொடர் ஸ்மார்ட்போன்களை கூறலாம்.

அக்டோபர் 15 ஆம் தேதி அன்று!

அதை நன்கு அறிந்த ரியல்மி நிறுவனம் தொடர்ச்சியான முறையில் அதன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அந்த வரிசையில் வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி அன்று ரியல்மி அதன் புதிய எக்ஸ் தொடர் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

என்ன ஸ்மார்ட்போன்?

அதென்ன ஸ்மார்ட்போன்? அதன்பிரதான அம்சங்கள் என்னென்ன? எப்போது அறிமுகம் ஆகிறது? என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்? போன்ற விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.

ரியல்மி இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன மாதவ் ஷெத், நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் ஆனது
ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ
என்பதை உறுதி செய்துள்ளார்.

பிரதான அம்சமாக கேமராக்கள்!

இது 64 எம்.பி அளவிலான கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், இதன் அறிமுகம் ஆனது வருகிற டிசம்பர் மாதம் நிகழும் என்பதையும் அவர் அறிவித்துள்ளார்.

ஆப்பு வைத்தார் அம்பானி! நோ இலவச அழைப்புகள்; புதிய திட்டங்கள் அறிவிப்பு!

சக்தி வாய்ந்த ஸ்னாப்டிராகன் 855+ சிப்செட்!

இந்த அறிவிப்பானது டிவிட்டர் வழியாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த ட்வீடின் படி, இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 855+ சிப்செட் மூலம் இயக்கப்படும் மற்றும் 90 ஹெர்ட்ஸ் அளவிலான டிஸ்ப்ளே Refresh Rate-ஐ கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக இந்த இரண்டு அம்சங்களையும் உறுதி செய்து கொள்ளலாம்!

முன்னதாக வெளியான தகவல்களும், ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஆனது 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 855+ ப்ராசஸர் போன்றவைகளை கொண்டிருக்கும் என்று கூறியுள்ளதால், இந்த அம்சங்களை நாம் இறுதி அம்சங்களாக எடுத்துக்கொள்ளலாம்.

முற்றிலும் புதிய இணைப்புகள்!

மற்றொரு தகவலானது, இந்த ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஆனது Rheinland global eye certification பெறும் என்றும், இதன் ஸ்க்ரீனில் புதிய E3 light-emitting material பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறுகிறது.

Motorola One Macro: ரெட்மியை வீழ்த்தும் விலை & அம்சங்களுடன் இந்திய அறிமுகம்!

ரியல்மி எக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் வாரிசு!

ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஆனது கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி எக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் வாரிசாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விலை நிர்ணயம் என்னவாக இருக்கும்?

இந்த ஸ்மார்ட்போன் ஆனது நிச்சயமாக மிட் ரேன்ஜ் பிரிவின் கீழ் வெளியாகாது என்பது வெளிப்படை. ஆக இது ரூ.29,999 என்கிற புள்ளியை சுற்றிய விலை நிர்ணயத்தை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது துல்லியமான அல்லது அதிகாரபூர்வமான விலை நிர்ணயம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Redmi 8: பட்ஜெட் விலை ஆனால் ப்ரீமியம் அம்சங்கள்; ஆளுக்கு ரெண்டு வாங்கலாம் போல!

காத்திருக்க வேண்டியது அவசியம்!

மற்ற அம்சங்களை பற்றி அறிய நாம் வெளியீட்டு தினமான அக்டோபர் 15 வரை காத்திருக்க வேண்டியது அவசியம் ஆகிறது. முன்னரே குறிப்பிட்டபடி ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஆனது வருகிற அக்டோபர் 15 அன்று ஐரோப்பாவில் அறிமுகமாம் ஆகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.