சிற்பங்களை சீரமைக்க கோரிய வழக்கு – தமிழக தொல்லியல்துறை ஆணையர் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

சிற்பங்களை சீரமைக்க கோரிய வழக்கு – தமிழக தொல்லியல்துறை ஆணையர் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

நெல்லை மாவட்டத்தில் கோவில் சிற்பம் மற்றும் சிலைகளை சீரமைத்து பாதுகாக்க கோரிய வழக்கில், தமிழக தொல்லியல்துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் கோவிலில் விஜயநகர பேரரசின் கலைச்சிறப்பை உணர்த்தும் தத்ரூபமான வீரபத்திரன், ரதி, மன்மதன், இலங்கை இளவரசி உள்ளிட்ட அழகிய சிற்பங்களை சீரமைக்கவும், அதன் சிறப்பை உணர்த்த வழிகாட்டிகளை பணியமர்த்தி, காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

மேலும், நெல்லை, திருப்புடைமருதூர், திருக்குறுங்குடி, களக்காடு, திருக்குறுக்குடி, கருவேலன்குளம் கோவில் சிலைகளை பாதுகாத்து பராமரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு, இது குறித்து தமிழக தொல்லியல்துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.