டெங்கு பாதிப்பு: யார் சொல்வது உண்மை? சுகாதாரத் துறையில் என்ன நடக்கிறது?-Samayam Tamil

டெங்கு பாதிப்பு: யார் சொல்வது உண்மை? சுகாதாரத் துறையில் என்ன நடக்கிறது?-Samayam Tamil

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 30 மருத்துவக் குழு வாகனங்கள் உட்பட 160 வாகனங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (அக்டோபர் 10) தொடங்கிவைத்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 100 வாகனங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு நிலவேம்பு கசாயம் விநியோகிப்படவுள்ளது. ஒரு வாரம் இந்த முகாம் நடைபெறவுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலி!

பின் செய்தியாளர்களைச் சந்தித்த விஜய பாஸ்கர், “மருத்துவ மாணவ, மாணவிகள் இந்த வாகனங்களில் சென்று நிலவேம்பு கசாயத்தை வழங்குவார்கள். ஏற்கெனவே பள்ளி, கல்லூரி, மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டுவருகிறது. தமிழகத்தில் எல்லையோர மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு உள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு இந்த ஆண்டு குறைவாகவே உள்ளது. டெங்கு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று அரசு முயற்சிக்கிறது” என்றார்.

டெங்கு பாதிப்பு குறைவு என்று அமைச்சர் கூறியுள்ள போதும் தொடர்ந்து டெங்கு பாதிப்பால் பலர் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் உயிரிழந்துவருகின்றனர்.

டெங்கு காய்ச்சல் அறிகுறியும், வீட்டு மருத்துவமும்!!

அக்டோபர் 8ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு நடத்திய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் 2951பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த முறை 2400ஆக இருந்த எண்ணிக்கை இந்த முறை 500 அதிகரித்துள்ளது. வட சென்னையில் அதிகமான டெங்கு பாதிப்பு உள்ளது. தர்மபுரி, அம்பத்தூர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

டெங்கு பாதிப்பு இந்த ஆண்டு அதிகம்: ஒப்புக்கொண்ட தமிழ்நாடு அரசு!

சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் இருவரும் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை கூறிவரும் நிலையில் டெங்கு பாதிப்பு குறித்து அரசுக்கு முழுமையாக தெரியவில்லையா அல்லது பாதிப்பு விவரங்களை மறைக்கின்றார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.