தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: மயங்க் அகர்வால் 108 ரன்கள், விராட் கோலி 63 ரன்கள் குவிப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: மயங்க் அகர்வால் 108 ரன்கள், விராட் கோலி 63 ரன்கள் குவிப்பு

புனே,
இந்தியாவுக்கு வந்துள்ள பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 
இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு  செய்தது. இதனையடுத்து இந்திய அணி முதலில் களமிறங்கி விளையாடியது. 
முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 108 ரன்கள், விராட் கோலி 63 ரன்கள், புஜாரா 58 ரன்கள் சேர்த்தனர். இந்தியாவின் முக்கியமான 3 விக்கெட்டுகளையும் தென் ஆப்பிரிக்காவின் ரபாடா கைப்பற்றினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.