நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள 110 பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்

நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள 110 பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்

நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள 110 பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்


நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்  மாநகராட்சி  பகுதியில் உள்ள 110 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆணையர் சரவணகுமார் அறிவுரையின்படி மாநகர்நல அதிகாரி டாக்டர் கிங்சால் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் பள்ளிகளில் 5 நாட்கள் நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியை தொடங்கியுள்ளனர்.

நாகர்கோவில் மீனாட்சிபுரம் உயர்நிலைப்பள்ளி, தொடக்கபள்ளியில் உள்ள 210 மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் வழங்கும் பணி தொடங்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் மாதவன்பிள்ளை தலைமையில் நகர சுகாதார செவிலியர் ரெத்தினஜோதி  மற்றும் பணியாளர்கள் நிலவேம்பு குடிநீர் வழங்கினர். இது குறித்து மாநகர்நல அதிகாரி டாக்டர் கிங்சால் கூறியதாவது: டெங்கு கொசுவை கட்டுப்படுத்த கொசுஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாக சென்று கொசு உற்பத்திக்கான காரணிகளை அழித்து வருகின்றனர். நாகர்கோவில் மாநகர பகுதியில்  டெங்கு காய்ச்சலில் யாரும் பாதிக்கப்படவில்லை. பள்ளி மாணவ,மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல் குடிசை பகுதிகளில் உள்ள வீடுகளில் உள்ளவர்களுக்கு வீடுவீடாக சென்று நிலவேம்பு குடிநீர் மாநகர் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.  பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றி நல்ல தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.