நாளை வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள் : ஐடி நிறுவன பணியாளர்களுக்கு அறிவுறுத்தல் 

நாளை வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள் : ஐடி நிறுவன பணியாளர்களுக்கு அறிவுறுத்தல் 

சென்னை ஓஎம்.ஆர் சாலையில் உள்ள ஐடி நிறுவன பணியாளர்கள் நாளை வீட்டில் இருந்து பணி செய்யுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது. 

சீன அதிபர் மற்றும் பிரதமர் வருகையையொட்டி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஜி.எஸ்டி. சாலை (சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை), அண்ணா சாலை (கத்திப்பாரா முதல் சின்னமலை வரை), சர்தார் வல்லபாய் படேல் சாலை, ராஜீவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து தாமதமாக செல்ல வாய்ப்புள்ளதால் மேற்கண்ட சாலைகளில் உள்ள வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் முன் ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்தியிருந்தது. 

இந்நிலையில், சென்னை ஓஎம்.ஆர் சாலையில் உள்ள ஐடி நிறுவன பணியாளர்கள் நாளை வீட்டில் இருந்து பணி செய்யுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.