நிலுவை பாக்கி தொகை ரூ.30 கோடி கேட்டு விவசாயிகள் போராட்டம்…

நிலுவை பாக்கி தொகை ரூ.30 கோடி கேட்டு விவசாயிகள் போராட்டம்…

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, நிலுவை பாக்கி தொகை 30 கோடி ரூபாயை கேட்டு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

வேலூர் அம்முண்டியில் உள்ள அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில் கரும்புகளுடன் நூற்றுக்கணக்கான விவசாயிகள், அங்கேயே சமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 2018-2019 ஆண்டுக்கான கரும்பு அரவை நிலுவை தொகை 10 கோடி ரூபாயை வழங்குவது, 2013 முதல் 2017 ஆண்டு வரை 4 ஆண்டுகளாக தமிழக அரசு பாக்கி வைத்துள்ள 25 கோடி ரூபாயை வழங்குவது, அரசின் ஊக்கத்தொகை 2 கோடி ரூபாயை உடனடியாக வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும் வேலூர் ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய லாபத்தின் பங்குதொகையான ஒன்றரை கோடி ரூபாயையும் விவசாயிகளின் நலன் கருதி விரைந்து வழங்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.