பாரதியார் பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் SFI தலைமையில் மாணவர்கள் நடத்திய போராட்டம் 

பாரதியார் பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் SFI தலைமையில் மாணவர்கள் நடத்திய போராட்டம் 

கோவை மாவட்டத்திலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில், தேர்வு கட்டணம் மற்றும் நிபந்தனை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக கோவை மாவட்ட தலைவர்  அஷார் தலைமையில் உயர்த்தப்பட்ட கட்டணங்களை ரத்து செய்யக்கோரி பாரதியார் பல்கலைக்கழகம் முற்றுகையிடப்பட்டு மனு கொடுக்கப்பட்டது.

மனு அளித்த அடிப்படையில் ஒரு வாரத்திற்குள் பதில் அளிப்பதாக பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்தது அதனடிப்படையில் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள். போராட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர்  தினேஷ் ராஜா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்  காவியா பேசினார்கள். மேலும் இந்த போராட்டத்தில் மாநில குழு உறுப்பினர் ஆகாஷ் , ரேவத் குமார் , சஞ்சய் , கயல்விழி , தினேஷ் ,ரமேஷ் , சந்தோஷ் கலந்து கொண்டார்கள்.

Strike by students led by SFI in coimbatore for bharathyar university fee hikeSource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.