ரெடியாக இருங்க! ரூ.26,990 க்கு ஒரு புதிய ஐபோன் அறிமுகமாகிறது; எப்போது? என்ன மாடல்?-Samayam Tamil

ரெடியாக இருங்க! ரூ.26,990 க்கு ஒரு புதிய ஐபோன் அறிமுகமாகிறது; எப்போது? என்ன மாடல்?-Samayam Tamil

வரப்போகும் ஆப்பிள் சாதனங்களை பற்றி துல்லியமான தகவல்களை வழங்குவதற்கு பெயர்போன ஆப்பிள் ஆய்வாளர் ஆன மிங்-சி குவோ, அடுத்து வெளியப்போகும் மலிவு விலையுள்ள ஐபோன் எஸ்இ 2 பற்றிய சுவாரசியமான தகவல்களை வெளியிட்டு உள்ளார்.

அதாவது, ஆப்பிள் ஐபோன் எஸ்இ2 ஆனது எப்போது வெளியாகும் என்று அவர் கண்டித்துள்ளார். மிங்-சி குவோவின்படி, ஐபோன் எஸ்இ 2 ஆனது அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும்.

வடிவமைப்பு மற்றும் டிஸ்பிளே!

இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஐபோன் 8-ன் வடிவமைப்பினால் ஈர்க்கப்படும் என்றும், 4.7 இன்ச் அளவிலான எல்சிடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தீபாவளி சீசனின் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்!

சக்திவாய்ந்த சிப்!

இது தவிர ஆப்பிள் அதன் மிகவும் மேம்பட்ட சிப்செட் ஆன A13 ஐ பயன்படுத்தி ஐபோன் SE2 ஐ இயக்கும் என்றும் குவோ கணித்துள்ளார்.

மேலும் குவோவின் கூற்றுப்படி, சுமார் 30 – 40 மில்லியன் ஆப்பிள் ஐபோன் SE2 யூனிட்டுகள் விற்கக்கூடும். இந்த ஐபோனில் டச் ஐடி சென்சார் அல்லது ஃபேஸ் ஐடி இருக்குமா என்பது பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

Airtel Diwali Offer: தள்ளுபடி முதல் இலவச சந்தாக்கள் வரை; முழு விவரங்கள் இதோ!

என்ன விலைக்கு அறிமுகம் ஆகலாம்?

91மொபைல்ஸ் தளத்தின் படி, ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2 ஆனது ரூ.26,990 என்கிற புள்ளியை சுற்றியதொரு விலை நிர்ணயத்தை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது அதிகாரபூர்வமான விலை அல்ல, முன்னர் வெளியான மாடல்களை வைத்து, எதிர்பார்க்கப்படும் அம்சங்களை வைத்து கணிக்கப்பட்டுள்ள விலை ஆகும் என்பது குறிப்பிட விரும்புகிறோம், அதாவது இதில் மாற்றங்கள் இருக்கலாம் என்று அர்த்தம்.

ஐபோன் எஸ்இ ஆ?

எஸ்இ பற்றி அறிமுகமே இல்லாதவர்களுக்கு, ஆப்பிள் நிறுவனம் மலிவான ஐபோன்களை விற்கும் நோக்கத்தின் கீழ் அதன் ஐபோன் எஸ்இ-யை கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது,இது ஐபோன் 5 எஸ் சேஸ் மற்றும் ஐபோன் 6 எஸ் இன்டர்னல்களுடன் வெளி வந்தது.

ஆப்பு வைத்தார் அம்பானி! நோ இலவச அழைப்புகள்; புதிய திட்டங்கள் அறிவிப்பு!

ஐபோன் 11 உடன் ஒப்பிடலாம்!

மேலும் வரவிருக்கும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ2 ஆனது 3 ஜிபி அளவிலான ரேம் கொண்டு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த புதிய பட்ஜெட் ஐபோன் ஆனது ஐபோன் 11-ன் செயல்திறனுடன் பொருந்தக்கூடியதாக இருக்கலாம் என்று அர்த்தம். சிலர் இதை ஐபோன் 8எஸ் என்றே அழைக்கிறார்கள்.

மார்ச் மாத இறுதியில்!

ஆப்பிளின் முந்தைய அறிமுக நிகழ்வுகளின் வரலாற்றைப் பார்க்கும்போது, குவோவின் முதல் காலாண்டு என்பது மார்ச் மாதத்தின் பிற்பகுதியாக இருக்கலாம். இந்த பட்ஜெட் ஐபோனின் துல்லியமான அல்லது அதிகாரபூர்வமான அப்டேட்களுக்கு சமயம் தமிழ் பக்கத்தின் டெக்னாலஜி பிரிவை பின்தொடரவும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.