வியட்நாமில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த ரயில்வே காபி கடைகளை அகற்ற காலக்கெடு…

வியட்நாமில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த ரயில்வே காபி கடைகளை அகற்ற காலக்கெடு…

வியட்நாமில் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் இடமான ரயில்வே தண்டவாள ஓர காபிக் கடைகளை அகற்றுவதற்கான இறுதி காலக்கெடுவை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது

வியட்நாம் தலைநகர் ஹனோய்யில், காலனிக் குடியிருப்புப் பகுதிகளுக்குள் ரயில்கள் பயணிக்கும் விதமாக தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

1902 ஆம் ஆண்டு பிரென்ச் ஆட்சியின் போது, இந்த ரயில் பாதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில், தண்டவாளங்களின் இருபுறத்திலும் அதிக அளவிலான காபிக் கடைகள் அமைக்கப்பட்டு, ஐஸ் டீ மிகவும் பிரபலம் அடைந்துள்ளது.

தண்டவாளத்தில் அமர்ந்து ஐஸ் டீ பருகுவது, காலனிக்குள் வரும் ரயிலுக்கு அருகில் நின்று செல்பி எடுப்பது போன்ற புதிய அனுபவங்களை பெருவதற்காக, இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இது மிகவும் ஆபத்தான செயல் என்பதால், தண்டவாளத்தின் ஒரத்தில் அமைந்திருக்கும் காபிக் கடைகளை அகற்ற அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை பொருட்படுத்தாமல் காபிக் கடைகள் இயங்கி வந்த நிலையில், இந்த வார இறுதிக்குள் கடைகளை அகற்ற வேண்டும் என அந்நாட்டு அரசு காலக்கெடு விதித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.