3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது

3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது

கொரியாவின் கியா மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் மாடலை வெளியிட்ட இரு மாதங்களுக்குள் 13,750 எண்ணிக்கையிலான செல்டோஸ் கார்களை விநியோகித்து, 50,000க்கு மேற்பட்ட முன்பதிவுகளை கடந்துள்ளது. கடந்த ஜூலை முதல் இந்த காருக்கான முன்பதிவு நடைபெற்று வருகின்றது.

கியாவின் செல்டோஸ் எஸ்யூவி காருக்கு கிடைத்த 50,000 முன்பதிவுகளில், கிட்டத்தட்ட பாதி 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மாடலுக்கும், சுமார் 30 சதவீதம் 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோலுக்கும், மீதமுள்ளவை 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுக்கும் கிடைத்துள்ளதாக இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் மாடலை தேர்ந்தெடுத்தவர்கள் பெரும்பாலும் இரட்டை கிளட்ச் ஆட்டோமேட்டிக் விருப்பத்தை அதிகப்படியாக தேர்ந்தெடுத்துள்ளனர் . குறிப்பாக செல்டோஸின் டாப் வேரியண்டுகளுக்கே அதிக தேவை உள்ளதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

செல்டோஸில் இடம்பெற்றுள்ள மூன்று என்ஜின்

இந்த காரில் பிஎஸ்6 அல்லது பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான நடைமுறைக்கு ஏற்றதாக வரவுள்ளது. இந்த எஸ்யூவி மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றிருக்கும். இதுதவிர, 1.4 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் கூடுதலாக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸூடன் இடம் பெற்றிருக்கும்.

புதிய 1.4 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 138 bhp மற்றும் 242 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

இந்த என்ஜின் 9.7 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும், மேலும், 16.1 கிமீ (MT) மற்றும் 16.2 கிமீ (DCT) மைலேஜ் வழங்கப்படும். குறிப்பாக இந்த என்ஜின் ஜிடி லைன் தொடரில் மட்டும் கிடைக்க உள்ளது.

1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதிகபட்சமாக 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம்  டார்க்கை உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஐவிடி (IVT – Intelligent continuously variable transmission) ஆட்டோ டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது, இந்த மாடல் மைலேஜ் 16.4 கிமீ (MT) மற்றும் 16.3 கிமீ (AT). மேலும், இந்த என்ஜின் 0-100 கிமீ வேகத்தினை எட்டுவதற்கு 11.8 வினாடிகளில் எடுத்துக் கொள்ளும்.

இறுதியாக, புதிய 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடல் வெறும் 11.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை பெற முடியும். செல்டோஸ் டீசல் கார் மைலேஜ் 17.8 கிமீ (AT) மற்றும் 20.8 கிமீ (MT) ஆகும்.

எம்ஜி ஹெக்டர்டாடா ஹாரியர், ஹூண்டாய் கிரெட்டா, நிசான் கிக்ஸ் மற்றும் ரெனோ கேப்டூர் போன்ற மாடல்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவி போன்றவற்றை எதிர்கொள்ள உள்ள கியா செல்டோஸ் எஸ்யூவி விலை ரூபாய் 11.22 லட்சம் முதல் ரூபாய் 19.38 லட்சம் விலைக்குள் சென்னை ஆன்ரோடு வந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.