Bigg Boss : வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் படுக்கையைப் பகிர்வதா? பாஜக MLA எதிர்ப்பு…

Bigg Boss : வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் படுக்கையைப் பகிர்வதா? பாஜக MLA எதிர்ப்பு…

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும், ஒரே படுக்கையை பகிர்ந்து கொள்வதை ஏற்க முடியவில்லை என்று நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் தொகுதி எம்.எல்.ஏ.வான நந்த் கிஷோர் குஜ்ஜார் இதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், தேசம் இழந்த பொலிவை மீட்டெடுக்க பிரதமர் மோடி முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளால் நாட்டின் கலாச்சாரம் அர்த்தமற்றதாகி விடுவதாகவும் எம்.எல்.ஏ. நந்த் கிஷோர் குஜ்ஜார் கூறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியானது கலாச்சார பன்பாடுகளுக்கு எதிரானது என்றும், குடும்பத்துடன் சேர்ந்து அமர்ந்து பார்க்க முடியாத நிகழ்ச்சி என்றும் அந்த எம்.எல்.ஏ. குற்றம்சாட்டியுள்ளார்.

ஆபாசம் மற்றும் அநாகரீகத்தை ஊக்குவிக்கும் அந்த நிகழ்ச்சியில், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆண் – பெண்  படுக்கையை பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் இருப்பதை ஏற்க முடியவில்லை என்றும் நந்த் கிஷோர் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெறாத வண்ணம், தணிக்கை நெறிமுறையைக் கொண்டுவர வேண்டும் என்று பிரகாஷ் ஜவடேகரை பாஜக எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.